Listen to the latest songs, only on JioSaavn.com
 

WC 2022 Qualifiers: இந்தியா - வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது

Updated: 17 October 2019 10:06 IST

தரவரிசையில் 146 வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது இந்தியா.

World Cup 2022 Qualifiers, India vs Bangaldesh: Adil Khan Helps India Salvage Draw Against Bangladesh
இந்தியா அணிக்காக அடில் கான் கோல் அடித்தார் © Twitter

2022 பிபா உலகக் கோப்பைகான தகுதி சுற்று போட்டியில் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இரண்டு தகுதி சுற்று போட்டிகள் விளையாடியிருந்த இந்தியா அணி ஓமன், கத்தார் அணிகளுக்கு எதிராக தகுதி சுற்று போட்டிகளில் விளையாடிய இந்தியா அணி ஒரு தோல்வி, ஒரு டிரா பதிவு செய்திருந்தது.

நேற்று வங்காளதேசம் அணியை எதிர்கொண்டது இந்தியா அணி. இந்த ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. வங்காளதேசம் அணிக்காக 42 வது நிமிடத்தில் சாத் ஊதின் கோல் அடித்தார். இந்தியா அணிகள் அதிகமாக முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியாமல் தடுமாறியது. அதற்கு பிறகு 73 வது நிமிடத்தில் அடில் கான் கோல் அடித்து இந்தியா அணிக்கு ஆறுதல் அளித்தார்.  

ஆசிய சாம்பியனான கத்தார் அணிக்கு எதிராக டிரா செய்தது இந்தியா அணி. தோகாவில் நடந்த அந்த போட்டியில் இந்தியாவின் கோல் கீப்பர் குர்பீத் சிங் அட்டகாசமாக விளையாடினார். அந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி விளையாடவில்லை.

முன்னதாக குவஹாத்தியில் ஓமன் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்தியா அணி தோல்வியடைந்தது.

சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவில் நடந்த இந்த போட்டி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நட்பு ரீதியான போட்டியில் விளையாடிய போது இந்தியாவின் முக்கிய வீரரான சந்தேஷ் ஜிங்கன் காயம் ஏற்பட்டதால் வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.

இதற்கு பின்பு தரவரிசையில் 146 வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது இந்தியா.

Comments
ஹைலைட்ஸ்
  • வங்காளதேசம் அணியை எதிர்கொண்டது இந்தியா அணி
  • இந்த ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது
  • வங்காளதேசம் அணிக்காக 42 வது நிமிடத்தில் சாத் ஊதின் கோல் அடித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
“ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை கேரம் விளையாட்டில் வெல்ல முடியும்” - சுனில் சேத்ரி
“ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை கேரம் விளையாட்டில் வெல்ல முடியும்” - சுனில் சேத்ரி
World Cup Qualifiers: கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா அணி...ஆப்கானிஸ்தானை வீழ்த்துமா?
World Cup Qualifiers: கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா அணி...ஆப்கானிஸ்தானை வீழ்த்துமா?
WC 2022 Qualifiers: இந்தியா - வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது
WC 2022 Qualifiers: இந்தியா - வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது
World Cup Qualifiers: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
World Cup Qualifiers: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
Advertisement