"நேர்மையை குறித்து மக்கள் கேள்வி கேட்கும்போது, வலிக்கிறது" - ரொனால்டோ!

Updated: 21 August 2019 17:16 IST

கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுக்கீஸ் டிவி ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில், "தனிப்பட்ட வாழ்க்கையில் 2018 மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது" என்று கூறினார்.

When People Question Your Honour, It Hurts, Says Cristiano Ronaldo
கடந்த ஆண்டு மாடல் கேத்ரின் மயோர்கா, ரொனால்கோவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தார். © AFP

கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுக்கீஸ் டிவி ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில், "தனிப்பட்ட வாழ்க்கையில் 2018 மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது" என்று கூறினார். கடந்த ஆண்டு மாடல் கேத்ரின் மயோர்கா, ரொனால்கோவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தார். அதில், 2009ம் ஆண்டு கால்பந்து வீரர் ஒருவர் லாஸ் வேகாஸ் ஹோட்டல் அறையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறினார். இந்த வழக்கு நெவடா நீதிமன்றத்தில் தள்ளுபடியானது, ஆனால் அதில் ரொனால்டோ பணம் அளித்ததாக ஒப்புக்கொண்டாரா என்று விளக்கம் கொடுக்கப்படவில்லை. குற்றச்சாட்டை மறுத்த ரொனால்டோ, முந்தைய தீர்வில் மயோர்காவுக்கு பணம் கொடுத்ததாக அவர் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

"நேர்மையை குறித்து மக்கள் கேள்வி கேட்பது, வலிக்கிறது," என்று செவ்வாய்க்கிழமை கூறினார். "எனக்கு இது அதிகமாக வலிக்கக் காரணம், எனக்கு பெரிய குடும்பம், மனைவி மற்றும் எல்லவாற்றையும் புரிந்துக்கொள்ளக் கூடிய அறிவாளியான குழந்தை இருக்கிறது" என்றார்.

"இந்த வழக்கில் என்னை நான் முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. மீண்டும் ஒருமுறை என் அப்பாவித்தனம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது என்னை பெருமைபட செய்கிறது," என்று ஜுவென்டஸ் மற்றும் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் நட்சத்திரமான ரொனால்டோ கூறினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • தனிப்பட்ட வாழ்க்கையில் 2018 மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது: ரொனால்டோ
  • மாடல் ஒருவர் ரொனால்கோவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தார்
  • கால்பந்து வீரர் ஒருவர் 2009ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறினார்
தொடர்புடைய கட்டுரைகள்
"உனக்கென்ன பைத்தியமா?" ரசிகர் மீது கோபமடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
"உனக்கென்ன பைத்தியமா?" ரசிகர் மீது கோபமடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
போட்டி முடியும் முன் வெளியேறிய ரொனால்டோ... காரணம் என்ன?
போட்டி முடியும் முன் வெளியேறிய ரொனால்டோ... காரணம் என்ன?
சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் கோபத்திற்கு காரணம் என்ன?
சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் கோபத்திற்கு காரணம் என்ன?
Euro 2020: ரொனால்டோ 700...இங்கிலாந்து வெற்றி...யூரோ 2020 தகுதி சுற்று அப்டேட்
Euro 2020: ரொனால்டோ 700...இங்கிலாந்து வெற்றி...யூரோ 2020 தகுதி சுற்று அப்டேட்
"ரொனால்டோ vs மெஸ்ஸி: இருவரில் யாரை பிடிக்கும்?" - கோலியின் பளிச் பதில்!
"ரொனால்டோ vs மெஸ்ஸி: இருவரில் யாரை பிடிக்கும்?" - கோலியின் பளிச் பதில்!
Advertisement