ப்ரீமியர் லீக்கின் மிகச்சிறந்த கோலை அடித்த எடன் ஹசார்டு

Updated: 09 April 2019 16:10 IST

எடன் ஹசார்டு கோல் மூலம் பிரிமியர் லீக் பட்டியலில் வெஸ்ட் ஹாம் யுனைடெட்டை 2-0 என்று வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்துள்ளது செல்ஸே.

Chelsea vs West Ham: Eden Hazard
இந்த போட்டியில் எடன் ஹசார்டு அடித்த கோல் மூலம் இந்த சீசனில் 28 கோல்களை அடித்துள்ளார் © AFP

எடன் ஹசார்டு கோல் மூலம் பிரிமியர் லீக் பட்டியலில் வெஸ்ட் ஹாம் யுனைடெட்டை 2-0 என்று வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்துள்ளது செல்ஸே. எடன் ஹசார்டு அபாரமான ஃபார்மில் உள்ளார். இந்த போட்டியில் அவர் அடித்த கோல் மூலம் இந்த சீசனில் 28 கோல்களை அடித்துள்ளார். இது பிரிமியர் லீக்கில் அதிக கோல் அடித்த தனிநபர் சாதனையாக பார்க்கப்படுகிறது. வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24வது நிமிடத்தில் இந்த சீஸனின் ஆகச்சிறந்த கோலை அடித்தார். வெஸ்ட் ஹாம் யுனைடெட் வீரர்கள் பலரை தாண்டி வந்து தனி ஆளாக பந்தை கடத்தி வந்து கோலடித்தார். 

இந்த கோல் சமூக வலைதளங்களில் வைரலானது. 

வர்ணனையாளர் அறையில் இருந்த மார்டின் டைலர் "இது இந்த சீசனின் சிறந்த கோல்களில் ஒன்று மட்டுமல்ல. ஆனால் இது ப்ரீமியர் லீக்கின் சிறந்த தனிநபர் கோலாகவும் உள்ளது" என்றார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய எடன் ஹசார்ட் "இந்த கோல் மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று கூறினார்.  மூன்று டிபெண்டர்களை தாண்டி கோலை போட்டது சிறப்பு வாய்ந்தது என்றார்.

இந்த வெற்றி மூலம் செல்ஸே ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. டாப் 4 அணிகளுக்கான ரேஸில் டோட்டன்ஹாம் மற்றும் அர்சனல் அடித்த இடங்களில் உள்ளன.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"எடன் ஹசார்டை ஏன் நீக்கினேன்" விளக்கும் செல்ஸே பயிற்சியாளர்
"எடன் ஹசார்டை ஏன் நீக்கினேன்" விளக்கும் செல்ஸே பயிற்சியாளர்
ப்ரீமியர் லீக்கின் மிகச்சிறந்த கோலை அடித்த எடன் ஹசார்டு
ப்ரீமியர் லீக்கின் மிகச்சிறந்த கோலை அடித்த எடன் ஹசார்டு
ஃபிபா உலக கோப்பை அரையிறுதி: பிரான்ஸை வீழ்த்தி சாதனை படைக்குமா பெல்ஜியம்?
ஃபிபா உலக கோப்பை அரையிறுதி: பிரான்ஸை வீழ்த்தி சாதனை படைக்குமா பெல்ஜியம்?
Advertisement