வரம்புமீறிய கொண்டாட்டம்; சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Updated: 20 March 2019 12:39 IST

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் ரொனால்டோதான் அதிகபட்ச கோல்களை அடித்துள்ளார்.

UEFA Probe Cristiano Ronaldo For "Improper" Goal Celebration
அட்லிட்டிகோ அணியை வென்றதன் மூலம் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முன்னேறியுள்ள ஜூவென்தஸ் அணி, டச்சு க்ளப் அஜேக்ஸுக்கு எதிராக விளையாட உள்ளது. © AFP

கடந்த வாரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பெற்றிருக்கும் ஜூவென்தஸ் அணிக்கும் அட்லிட்டிகோ மாட்ரிக் அணிக்கும் இடையில் நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில், 3 - 0 என்ற கோல் கணக்கில் ஜூவென்தஸ் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் ரொனால்டோ, ஹாட்-ட்ரிக் கோல் அடித்து அசத்தினார். கோல் போட்டவுடன் அவர், அட்லிட்டிகோ அணியின் பயிற்சியாளர் டியாகோ சிமியோனை கேலி செய்யும் விதத்தில் கொண்டாட்டம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து யூஏஃபா அமைப்பு, ரொனால்டோ மீது விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில், ரொனால்டோவுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுமா என்பது குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.

30rss5i

படம்: ஏ.எஃப்.பி

அதே நேரத்தில ஜூவென்தஸ் அணியின் பயிற்சியாளர் மசிமிலியோனா அலெக்ரி, ‘அன்றைய போட்டியில் கோல் போட்டவுடன், ஒவ்வொருவரும் அவர்களுக்கு விருப்பப்பட்ட வகையில் கொண்டாடினர். அன்று ரொனால்டோ செய்ததில் எனக்கு எதுவும் தவறாக தெரியவில்லை. அது வெறும் கொண்டாட்டம். அதனால், அவருக்கு அபராதமோ, போட்டியிலிருந்து தடை விதித்தல் போன்ற நடவடிக்கையோ எடுக்கப்படாது என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார். 

அட்லிட்டிகோ அணியை வென்றதன் மூலம் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முன்னேறியுள்ள ஜூவென்தஸ் அணி, டச்சு க்ளப் அஜேக்ஸுக்கு எதிராக விளையாட உள்ளது. இரண்டு லெக்கில் நடக்கும் போட்டிகள், ஏப்ரல் 10 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. 

முன்னதாக அட்லிட்டிகோ பயிற்சியாளர் டியாகோ, ஜூவென்தஸுக்கு எதிரான முந்தைய போட்டியின்போது, வரம்பு மீறி கொண்டாடினார் என்று குற்றம் சாட்டப்பட்டு, 20,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் ரொனால்டோதான் அதிகபட்ச கோல்களை அடித்துள்ளார். இதுவரை அவர் 160 போட்டிகளில் விளையாடி 124 கோல்களை போட்டுள்ளார். 

Comments
ஹைலைட்ஸ்
  • அட்லிட்டிகோ அணிக்கு எதிரான போட்டயில் இந்த சம்பவம் நடந்துள்ளது
  • அந்தப் போட்டியில் ரொனால்டோ, 3 கோல்கள் அடித்தார்
  • சாம்பியன்ஸ் லீக்கின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளது ஜூவென்தஸ்
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி
வரம்புமீறிய கொண்டாட்டம்; சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
வரம்புமீறிய கொண்டாட்டம்; சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
அட்லெட்டிகோ அசத்தல்... ஜுவெண்டஸ் சொதப்பல்.... சாம்பியன்ஸ் லீக் அப்டேட்!
அட்லெட்டிகோ அசத்தல்... ஜுவெண்டஸ் சொதப்பல்.... சாம்பியன்ஸ் லீக் அப்டேட்!
ரொனால்டோவிற்கு பெரும் அபராதம் விதித்த நீதிமன்றம்; ஏன் தெரியுமா?
ரொனால்டோவிற்கு பெரும் அபராதம் விதித்த நீதிமன்றம்; ஏன் தெரியுமா?
இத்தாலியிலும் நான் தான் ராஜா என நிரூபித்த ரொனால்டோ
இத்தாலியிலும் நான் தான் ராஜா என நிரூபித்த ரொனால்டோ
Advertisement