இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பை: இந்தியா, சிரியா ஆட்டம் ட்ரா

Updated: 17 July 2019 13:55 IST

இந்தியா ஏற்கெனவே தஜிகிஸ்தான் மற்றும் வட கொரியாவிடம் தோற்றதால் போட்டியை விட்டு வெளியேறிய நிலையில் இந்த போட்டியை சமன் செய்துள்ளது. 

Syria Hold India To 1-1 Draw In Intercontinental Cup
இந்தியா சிரியா போட்டி 1-1 என்று ட்ராவில் முடிவடைந்தது. © Twitter @IndianFootball

இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா சிரியாவை எதிர்கொண்டது. இந்த போட்டி 1-1 என்று ட்ராவில் முடிவடைந்தது. நரேந்தர் கேலாட் 51வது நிமிடத்தில் சிரியாவின் தாக்குதலை தடுத்து கோலடித்தார். அதனை 78வது நிமிடத்தில் சிரியாவின் கேப்டன் பிராஸ் சமன் செய்தார். இந்தியா ஏற்கெனவே தஜிகிஸ்தான் மற்றும் வட கொரியாவிடம் தோற்றதால் போட்டியை விட்டு வெளியேறிய நிலையில் இந்த போட்டியை சமன் செய்துள்ளது. 

இந்த போட்டியை வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த சிரியா இந்திய அணியின் தாக்குதல் ஆட்டத்தில் சற்று தடுமாறியது. முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. 

51வது நிமிடத்தில் அனிருத் டபா கார்னர் கிக்கில் தந்த வாய்பொபை பயன்படுத்தி கோலடித்தார் கேலாட். அவருடைய இரண்டாவது சர்வதேச போட்டியில் தனது முதல் கோலை அடித்துள்ளார்.

அதன் பின் இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை ஆடி சிரியாவுக்கு சிக்கல் தந்தது. பின்னர் சிரியா கேப்டன் ஃபிராஸ் பெனால்டியை பயன்படுத்தி கோலடித்தார்.

கடைசி கட்டங்களில் கோலுக்கு போராடிய சிரியாவை மிகவும் போராடி சமாளித்தது இந்திய அணி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
WC 2022 Qualifiers: இந்தியா - வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது
WC 2022 Qualifiers: இந்தியா - வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது
World Cup Qualifiers: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
World Cup Qualifiers: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பை: இந்தியா, சிரியா ஆட்டம் ட்ரா
இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பை: இந்தியா, சிரியா ஆட்டம் ட்ரா
Advertisement