மெஸ்ஸியை விஞ்சிய இந்திய கால்பந்து வீரர் சேத்ரி..!

Updated: 07 January 2019 17:25 IST

4-1 என தாய்லாந்தை வென்ற இந்தியா, மூன்று புள்ளிகளை பெற்று ஏ பிரிவில் முதல் இடத்தில் உள்ளது. .

Sunil Chhetri Overtakes Lionel Messi With Second-Highest International Goals Among Active Players
இரண்டு கோல்களை அடித்து அசத்தினார் சுனில் சேத்ரி  © ட்வீட்டர்

2019 AFC  ஆசிய கோப்பை அபுதாபியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில், இந்தியா – தாய்லாந்து அணிகள் மோதின.

34 வயதான சுனில் சேத்ரி தான் இந்தியா ஆண்கள் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர். நேற்று இரண்டு கோல்கள் அடித்து சர்வதேச போட்டிகளில் தனது கோல் எண்ணிக்கையை 67 ஆக உயர்த்தியுள்ளார்.

இதன் மூலம் கால்பந்து உலகின் ஜாம்பவான் மெஸ்ஸியின் கோல் சாதனை முறியடித்துள்ளார். தற்போது விளையாடி கொண்டிருக்கும் வீரர்களில் தன் நாட்டிற்காக சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ளார் நமது சுனில் சேத்ரி.

சுனில் சேத்ரியின் இந்த சாதனைக்கு AFC  ஆசிய கோப்பை அமைப்பு, ட்வீட்டரில் பாராட்டி உள்ளனர்.

 

 

104 வது போட்டியில் விளையாடும் சுனில் சேத்ரி , இந்த போட்டியின் முதல் கோலை பெனால்டி மூலம் அடித்தார். 46 வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் சுனில் சேத்ரியே அடித்தார். இதன் மூலம் மொத்தம் 67 கோல்களை அடித்துள்ளார் சேத்ரி .

தற்சமயம் சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களில் ரொனால்டோ மட்டுமே சுனிலை விட அதிக கோல் அடித்துள்ளார். 85 கோல்களை அடித்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, முதல் இடத்தில் உள்ளார்.  

4-1 என தாய்லாந்தை வென்ற இந்தியா, மூன்று புள்ளிகளை பெற்று ஏ பிரிவில் முதல் இடத்தில் உள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • இரண்டு கோல்களை அடித்தார் சுனில் சேத்ரி 
  • 4-1 என இந்தியா வென்றது
  • இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் சுனில் சேத்ரி 
தொடர்புடைய கட்டுரைகள்
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
ஆர்சிபி பயிற்சியின் போது கோலியை சந்தித்த பிரபலம்!
ஆர்சிபி பயிற்சியின் போது கோலியை சந்தித்த பிரபலம்!
ஆசியக் கோப்பை 2019: முதல் சுற்றுடன் வெளியேறியது இந்தியா அணி!
ஆசியக் கோப்பை 2019: முதல் சுற்றுடன் வெளியேறியது இந்தியா அணி!
சுனில் சேத்ரியின் சாதனை போட்டியில் வெற்றி பெறுமா இந்தியா?
சுனில் சேத்ரியின் சாதனை போட்டியில் வெற்றி பெறுமா இந்தியா?
Advertisement