சுனில் சேத்ரி பிறந்தநாள் அன்று சச்சின் டெண்டுல்கர் வைத்த சிறப்புக் கோரிக்கை

Updated: 04 August 2018 12:03 IST

சேத்ரி இந்திய வீரர்களுள் அதிக போட்டிகளில் விளையாடியவரும், அதிக கோல்களை அடித்த வீரரும் ஆவார்

Sunil Chhetri Birthday: Sachin Tendulkar Makes A Special Demand From The India Football Team Captain

சச்சின் டெண்டுல்கர் இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரியின் பிறந்தநாள் அன்று ஒரு சிறப்புக் கோரிக்கையை வைத்தார். “பிறந்தநாள் வாழ்த்துகள் சுனில் சேத்ரி. இந்திய அணிக்கு மேலும் மேலும் பல வெற்றிகளைத் தேடிந்தந்து நமது நாட்டில் கால்பந்து விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ட்விட்டரில் அவர் பதிவிடுள்ளார். இச்செய்தியுடன் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்தார்.

2005 முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் சுனில் சேத்ரி 101 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2018 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த வீரராகவும் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இவரைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் சுனில் சேத்ரி, முதல் சீசனில் அவ்வணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றார். 2016இலும் பெங்களூரு இரண்டாமிடம் பிடித்தது.

பெங்களூரு அணியும் ட்விட்டரில் தங்களது கேப்டனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளது.

 

அடுத்து ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள AFC ஏசியன் கோப்பையில் இந்தியாவுக்குத் தலைமையேற்று சுனில் சேத்ரி விளையாடவுள்ளார். ஆசியாவின் தலைசிறந்த அணிகளுடன் இதில் இந்திய அணி மோத உள்ளது.

சேத்ரி இந்திய வீரர்களுள் அதிக போட்டிகளில் விளையாடியவரும், அதிக கோல்களை அடித்த வீரரும் ஆவார். உலக அளவில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் இவர் 64 கோல்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments
ஹைலைட்ஸ்
  • இன்று (வெள்ளி) சுனில் சேத்ரியின் 34வது பிறந்தநாள்
  • இந்திய கால்பந்து அணி கேப்டன் தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடினார்
  • அடுத்து ஜனவரியில் நடைபெறவுள்ள AFC ஏசியன் கோப்பையில் விளையாடவுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
ஆர்சிபி பயிற்சியின் போது கோலியை சந்தித்த பிரபலம்!
ஆர்சிபி பயிற்சியின் போது கோலியை சந்தித்த பிரபலம்!
ஆசியக் கோப்பை 2019: முதல் சுற்றுடன் வெளியேறியது இந்தியா அணி!
ஆசியக் கோப்பை 2019: முதல் சுற்றுடன் வெளியேறியது இந்தியா அணி!
Advertisement