ரொனால்டோ விளையாடவில்லை என்பதால் வழக்கு தொடரவுள்ள தென் கொரியா ரசிகர்கள்

Updated: 30 July 2019 13:42 IST

ரொனால்டோ இவ்வாறு போட்டியில் விளையாடாமல் 60,000 பேரை ஏமாற்றியதற்கு சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டுள்ளார்.

South Korean Football Fans To Sue Over Cristiano Ronaldo Benching
கே லீக் ஆல் ஸ்டார் அணியை எதிர்கொண்ட ஜூவெண்டஸ் அணியின் போட்டியை காண 65,000 பேர் வந்திருந்தனர். © AFP

கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ள ஜூவெண்டஸ் அணியானது சென்ற வாரம் சீயோலில் நட்புறவு போட்டி விளையாடியது. கே லீக் ஆல் ஸ்டார் அணியை எதிர்கொண்ட ஜூவெண்டஸ் அணியின் போட்டியை காண 65,000 பேர் வந்திருந்தனர்.

உலக சூப்பர்ஸ்டாரான ரொனால்டோ விளையாடுவதை காணவே இந்த கூட்டம். ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த போட்டியில் ரொனால்டோ ஒரு நிமிடம் கூட விளையாடவில்லை. இது ரசிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. விரக்தியில் அங்கு கூடி இருந்த சில ரசிகர்கள் ரொனால்டோவிற்கு இணையான போட்டியாளராக கருதபடும் மற்றொரு சூப்பர்ஸ்டாரான மெஸ்ஸியின் பெயரை கூறி சத்தம் போட துவங்கினர்.

இந்த போட்டி முதலில் அறிவிக்கப்பட்ட போது, இந்த போட்டியை நடத்துபவர்கள், ரொனால்டோ குறைந்தது 45 நிமிடம் விளையாடுவது பொருத்து ஜூவெண்டஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்தது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விலையானது 30,000 வான் (25 அமெரிக்கன் டாலர்) முதல் 4,00,000 வான் (338 டாலர்) வரை விற்பனையானது. ஜூலை 3 ஆம் தேதி விற்க துவங்கிய இந்த டிக்கெட்கள் இரண்டரை மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.

இந்த விரக்தியில் ஸ்போர்ட்ஸ் ஏஜென்சி மீது வழக்கு கொடுக்க உள்ளனர் இந்த போட்டியை காண வந்த கால்பந்து ரசிகர்கள்.

‘இதுவரை 2000 ரசிகர்கள் வழக்கு கொடுக்க முன்வந்துள்ளனர். ஏஜென்சி டிக்கெட் வாங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனில் அடுத்த வாரம் வழக்கு தொடுக்க உள்ளோம்' என ஏஎப்பிக்கு தெரிவித்தார் வழக்கறிஞர் கிங் ஹுன் கி.

இது குறித்து இப்போட்டியை ஏற்பாடு செய்த கொரியா ஏஜென்சியான தி பெஸ்தாவின் சிஇஓ ராபின் சங் கண்ணீர் மல்க கூறுகையில், ‘ரொனால்டோ விளையாடுவார் என நானும் எண்ணினேன். ஆனால் அவர் விளையாட விருப்பமில்லை என கூறிவிட்டார். எனவே எங்களால் எதுவும் செய்யவில்லை' என்றார்.

ரொனால்டோ இவ்வாறு போட்டியில் விளையாடாமல் 60,000 பேரை ஏமாற்றியதற்கு சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஜூவெண்டஸ் அணியின் போட்டியை காண 65,000 பேர் வந்திருந்தனர்.
  • உலக சூப்பர்ஸ்டாரான ரொனால்டோ விளையாடுவதை காணவே இந்த கூட்டம்
  • . இந்த போட்டியில் ரொனால்டோ ஒரு நிமிடம் கூட விளையாடவில்லை.
தொடர்புடைய கட்டுரைகள்
இன்ஸ்டாகிராமில் 200 மில்லயன் ஃபாலோவர்ஸை கொண்ட முதல் நபர் ஆனார் ரொனால்டோ!
இன்ஸ்டாகிராமில் 200 மில்லயன் ஃபாலோவர்ஸை கொண்ட முதல் நபர் ஆனார் ரொனால்டோ!
"மெஸ்ஸியால் கூட செய்ய முடியாது" - அதிரடி கோல் அடித்த ரொனால்டோ!
"மெஸ்ஸியால் கூட செய்ய முடியாது" - அதிரடி கோல் அடித்த ரொனால்டோ!
"உனக்கென்ன பைத்தியமா?" ரசிகர் மீது கோபமடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
"உனக்கென்ன பைத்தியமா?" ரசிகர் மீது கோபமடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
போட்டி முடியும் முன் வெளியேறிய ரொனால்டோ... காரணம் என்ன?
போட்டி முடியும் முன் வெளியேறிய ரொனால்டோ... காரணம் என்ன?
சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் கோபத்திற்கு காரணம் என்ன?
சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் கோபத்திற்கு காரணம் என்ன?
Advertisement