மீட்கப்பட்ட தாய்லாந்து சிறுவர்கள் தங்களுடைய கால்பந்து திறன்களைக் காண்பித்தனர்

Updated: 19 July 2018 23:02 IST

வைல்ட் ரோர்ஸ் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் இரண்டு வாரங்கள் குகையில் மாட்டிக்கொண்டனர்.

Rescued Thai Boys Showcase Their Football Skills In First Appearance After Episode
© Reuters

தாம் லுங் குகைக்குள் சிக்கி இரண்டு வாரங்களுக்கு மேல் அங்கு செலவிட்ட வைல்ட் ரோர்ஸ் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள், மீட்கப்பட்ட பிறகு சியாங் ராய் மாகாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தங்களுடைய கால்பந்தாட்ட திறன்களை வெளிப்படுத்தினர். சர்வதேச மீட்புக் குழுவால் காப்பாற்றப்படுவதற்கு முன்பு இருட்டில் அவர்கள் ஒன்பது நாட்கள் செலவு செய்தது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்பட்டனர். சிறுவர்கள் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர்களைக் காணப் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். பின்பு அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மைதானத்தில் அவர்கள் கால்பந்து விளையாடுவதைக் கண்டு ரசித்தனர். சிறுவர்கள் பந்து உதைக்கும் திறன்களால் கூடியிருந்த மக்களைக் கவர்ந்தனர்.

 

மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் தங்களுடைய திகிலூட்டும் அனுபவத்தில் திகைத்திருக்க, "இது ஒரு அதிசயம்" என மீட்பு சம்பவத்தைப் பற்றி வைல்ட் ரோர்ஸ் அணியைச் சேர்ந்த 14 வயது அதுல் சேம்-ஆன் கூறினார்.

அவர்கள் குகைக்குள் சிக்கியது கண்டறியப்படும் வரை உணவில்லாமல், பாறைகளில் வழியும் நீரை மட்டுமே நம்பி உயிர்வாழ்ந்திருந்தனர்.

மருத்துவமனையில் ஓய்வெடுத்த பிறகு 13 பேரும் நல்ல உடல், மன ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இரண்டு வாரங்களுக்கும் மேல் சிறுவர்கள் வெள்ளம் சூழ்ந்த தாம் லூங் குகையில் சிக்கியிருந்தனர். எனவே நீண்ட கால பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என வல்லுனர்கள் எச்சரித்திருந்ததைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு மிகவும் கவனமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சியாங் ராய் மக்கள் தொடர்புத் துறையானது செய்தி நிறுவனங்களிடம் கேள்விகளை முன்னரே பெற்று,  உளவியல் நிபுணர்களின் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

புதன்கிழமை, தாய்லாந்து ஆட்சிக்குழுத் தலைவர் ப்ரயூத் சான் ஊடகங்களிடம் சிறுவர்களைப் பாதிக்கின்ற தேவையற்ற கேள்விகளைக் கேட்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

11 முதல் 16 வயதுவரை உள்ள அந்தச் சிறுவர்களின் குடும்பத்தினரிடம், குறைந்தது ஒரு மாதம் பத்திரிகையாளர்களைத் தொடர்புகொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தியிருக்கின்றனர் மருத்துவர்கள்.

மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரான 13 வயது, டோமின் பாட்டி காமெயு ப்ரெம்தெப், ஏஎஃப்பி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தான் மிகவும் உற்சாகமாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் அவர் "இது என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான நாள்," என்றும் கூறினார்.

ஜூன் 23 அன்று குகைக்குள் சென்ற சிறுவர்கள் திடீரென அதிகரித்த வெள்ளத்தில் மாட்டிக்கொண்டனர். பிறகு அவர்களை மீட்க தாய்லாந்தின் தலைமையில் எடுக்கப்பட்ட சர்வதேச முயற்சிகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

ஒன்பது நாட்களாக உணவின்றி, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த நீர்மூழ்கி வல்லுனர்களால் தாய் லூங் குகையில் பல கிலோமீட்டர்கள் உள்ளே உடல் மெலிந்த நிலையில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மீட்புக் குழுவினர் அவர்களை வெளியே கொண்டு வர பல திட்டங்களை விவாதித்து,
இறுதியாக அவர்களே நீரில் மூழ்கிச் சென்று மீட்டுவரலாம் என்கிற சிக்கலான முடிவுக்கு வந்தனர். மீட்பின்போது அமைதியாக இருக்க சிறுவர்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டு, மீட்கப்பட்டு ராணுவ ஸ்ட்ரெச்சர்களில் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டைச் சேர்ந்த குகை மீட்பு வல்லுனர்களுமே இந்த திட்டம் வேலை செய்யும் என உறுதியாக நம்பவில்லை. ஜூலை 10 அன்று கடைசி ஐந்து பேரும் மீட்கப்பட்ட பிறகு எல்லாரும் நிம்மதி அடைந்தனர்.
 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சாம்பியன் ஆகுமா லீவர்பூல்? பிரீமியல் லீக் அப்டேட்
சாம்பியன் ஆகுமா லீவர்பூல்? பிரீமியல் லீக் அப்டேட்
சாம்பியன்ஸ் லீக் காலிறுதி: யூனைடெடை வீழ்த்திய பார்சிலோனா!
சாம்பியன்ஸ் லீக் காலிறுதி: யூனைடெடை வீழ்த்திய பார்சிலோனா!
ப்ரீமியர் லீக்கின் மிகச்சிறந்த கோலை அடித்த எடன் ஹசார்டு
ப்ரீமியர் லீக்கின் மிகச்சிறந்த கோலை அடித்த எடன் ஹசார்டு
போஸ்ட்டுக்குள் வந்தும் கோல் போடாமல் போன கால்பந்துவீரர்!
போஸ்ட்டுக்குள் வந்தும் கோல் போடாமல் போன கால்பந்துவீரர்!
மற்றுமொரு லா லிகா போட்டி, மற்றுமொரு மெஸ்ஸி மேஜிக்...!!!
மற்றுமொரு லா லிகா போட்டி, மற்றுமொரு மெஸ்ஸி மேஜிக்...!!!
Advertisement