ரியல் மாட்ரிட் அணியை பந்தாடிய அஜக்ஸ் அணி... சம்பியன்ஸ் லீக் அப்டேட்..!

Updated: 06 March 2019 11:54 IST

இந்தப் போட்டியில், 4-1 என கோல் கணக்கில் அஜக்ஸ் வென்றது. மொத்ததில் 5-3 என ரியல் மாட்ரிட் அணியை பந்தாடியது அஜக்ஸ் அணி

Real Madrid Dumped Out Of Champions League By Ajax
4-1 என கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வென்றது அஜக்ஸ் அணி © AFP

கடந்த ஏழு நாட்களில் லா லிகாவில் பார்சிலோனாவிடம் தோல்வி, கோப்பா டெல் ரே தொடரில் தோல்வி என தடுமாறி வந்த ரியல் மாட்ரிட் அணி, தற்போது சாம்பியன்ஸ் லீக் தொடரில் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட் அணி தான். அதிலும் கடந்த மூன்று முறை தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது ரியல் மாட்ரிட் அணி.

இந்நிலையில், நேற்று நடந்த 2019 சாம்பியன்ஸ் லீக் தொடரின் போட்டியில், ரியல் மாட்ரிட் அணியும் அஜக்ஸ் அணியும் மோதின. இந்த இரு அணிகள் மோதிய முன்னாள் போட்டியில் 2-1 என ரியல் மாட்ரிட் வென்றிருந்தது.

ரியல் மாட்ரிட் அணியின் செர்கியோ ராம்போஸ் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. மற்றொரு ஸ்டார் வீரரான பேல், ஆட்டத்தின் 29வது நிமிடத்தில்தான் மாற்று வீரராக களமிறங்கினார்.

ஆட்டத்தின் 7 வது நிமிடத்தில் அஜக்ஸ் அணியின் ஜியாக்ஸ் அற்புதமான கோல் மூலம் 1-0 என முன்னிலையை அஜக்ஸ் அணிக்கு வழங்கினார். அவரைத் தொடர்ந்து 18 வது நிமிடத்தில் நெரக்ஸ் அஜக்ஸ் அணிக்காக இரண்டாவது கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என கோல் கணக்கில் அஜக்ஸ் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், 62வது நிமிடத்தில் டாடியாக் அஜக்ஸ் அணிக்காக கோல் அடிக்க 3-0 என முன்னிலை பெற்றது அஜக்ஸ். 70வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு ஆறுதலாக அசன்சியோ கோல் அடித்தார். 3-1 என கோல் கணக்கில் இருக்க, 72 வது நிமிடத்தில் ஸ்கோனே கோல் அடிக்க 4-1 என அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றது அஜக்ஸ்.

இதனால் இந்தப் போட்டியில், 4-1 என கோல் கணக்கில் அஜக்ஸ் வென்றது. மொத்ததில் 5-3 என ரியல் மாட்ரிட் அணியை பந்தாடியது அஜக்ஸ் அணி. இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறியது அஜக்ஸ் அணி.

இதுவரை 13 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ள ரியல் மாட்ரிட் அணி, இந்த ஆண்டு காலிறுதிக்குக் கூட முன்னேறாமல் போனது அதிர்ச்சியான ஒன்றுதான். ரொனால்டோவின் மேஜிக் ஆட்டத்தையும் ஜிடேயினின் பயிற்சியையும் ரியல் மாட்ரிட் அணி மிஸ் செய்வதற்கு இந்த தோல்வியே சாட்சி.

Comments
ஹைலைட்ஸ்
  • பேல் ஆட்டத்தின் 29 வது நிமிடத்தில் தான் களமிறங்கினார்
  • இந்த போட்டிக்கு முன் 2-1 என முன்னிலையில் இருந்தது ரியல் மாட்ரித் அணி
  • மூன்று ஆண்டுகள் தொடர்ந்து சாம்பியன் லீக் தொடரை வென்றது ரியல் மாட்ரித் அணி
தொடர்புடைய கட்டுரைகள்
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
ரியல் மாட்ரிட் அணியை விட்டு வெளியேறுகிறாரா பேல் ?
ரியல் மாட்ரிட் அணியை விட்டு வெளியேறுகிறாரா பேல் ?
ரியல் மாட்ரிட் அணியை பந்தாடிய அஜக்ஸ் அணி... சம்பியன்ஸ் லீக் அப்டேட்..!
ரியல் மாட்ரிட் அணியை பந்தாடிய அஜக்ஸ் அணி... சம்பியன்ஸ் லீக் அப்டேட்..!
மெஸ்ஸி - செர்சியோ மோதல்...எல் கிளாசிக்கோ அப்டேட்...!!!
மெஸ்ஸி - செர்சியோ மோதல்...எல் கிளாசிக்கோ அப்டேட்...!!!
பரபரப்பின் உச்சம் தொட்ட
பரபரப்பின் உச்சம் தொட்ட 'கோப்பா டெல் ரே'!
Advertisement