மோரின்ஹோவிற்கு மில்லியன்களில் செலவிட்ட மான்செஸ்டர் யூனைடத்

Updated: 15 February 2019 17:31 IST

வரி உட்பட ஏனைய செலவுகள் போக, 44 மில்லியன் பவுண்ட் லாபமாக பெற்றுள்ளது மான்செஸ்டர் யூனைடெட் அணி.

Premier League: Manchester United Confirm Huge Jose Mourinho Pay-Off
ஜோஸ் மோரின்ஹோவை நீக்கியதால் மான்செஸ்டர் யூனைடெட் அணிக்கு 20 மில்லியன் பவுண்ட்ஸ் செலவானது © AFP

மான்செஸ்டர் யூனைடெட் அணியின் மேலாளராக இருந்தவர் ஜோஸ் மோரின்ஹோ. இவரது பயிற்சியின் கீழ் மான்செஸ்டர் அணி சரியாக விளையாடதால், மோரின்ஹோ அதிரடியாக நீக்கப்பட்டார்.

மோரின்ஹோவிற்கு பதிலாக ஓலி கன்னர், மான்செஸ்டர் யூனைடெட் அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டார்.

கன்னரின் பயிற்சியின் கீழ் மான்செஸ்டர் யூனைடெட் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ப்ரீமியர் லீக் தரவரிசையில் முதல் நான்கு இடங்களுக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், ஜோஸ் மோரின்ஹோவை நீக்கியதால் மான்செஸ்டர் யூனைடெட் அணிக்கு 20 மில்லியன் பவுண்ட் செலவானதாக மான்செஸ்டட் யூனைடெட் அணியின் துணைத் தலைவர் எட் உட்வேர்ட் தெரிவித்துள்ளார். இதில் மோரின்ஹோவின் உதவியாளர்களுக்கும் செலவிட வேண்டியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

கடந்த காலாண்டில், மான்செஸ்டர் யூனைடெட் அணி 208.6 மில்லியன் பவுண்ட்ஸ் சம்பாதித்துள்ளது. இதில் வரி உட்பட ஏனைய செலவுகள் போக, 44 மில்லியன் பவுண்ட் லாபமாக பெற்றுள்ளது மான்செஸ்டர் யூனைடெட் அணி.

Comments
ஹைலைட்ஸ்
  • காலாண்டில், மான்செஸ்டர் யூனைடத் அணி 208.6 மில்லியன் பவுண்ட் சம்பாதித்தது
  • ப்ரீமியர் லீக் தரவரிசையில் முதல் நான்கு இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
  • ஓலி கன்னர் மான்செஸ்டர் அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
மோரின்ஹோவிற்கு மில்லியன்களில் செலவிட்ட மான்செஸ்டர் யூனைடத்
மோரின்ஹோவிற்கு மில்லியன்களில் செலவிட்ட மான்செஸ்டர் யூனைடத்
பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் சிக்கிய மான்செஸ்டர் யூனைடடின் மாஜி மேலாளர்!
பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் சிக்கிய மான்செஸ்டர் யூனைடடின் மாஜி மேலாளர்!
Advertisement