சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு யார் முன்னேறுவர்... பரபரப்பில் ப்ரிமியர் லீக்!

Updated: 28 February 2019 12:39 IST

தரவரிசையில், 69 புள்ளிகளுடன் முதல் இடத்தில் லிவர்பூல் அணி உள்ளது. இரண்டாவது இடத்தில் 68 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி அணி உள்ளது

Premier League: Liverpool Run Riot As Manchester City Stay In Touch With Narrow Win
5-0 என கோல் கணக்கில் சுலபமாக வெற்றி பெற்றது லிவர்பூல் அணி © AFP

ப்ரிமியர் லீக் தொடரின் தரவரிசையில் டாப் 4 இடங்கள் பெறும் அணிகளே சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு முன்னேறும். இந்த ஆண்டு ப்ரிமியர் லீக் தரவரிசையில் டாப் 4 இடத்திற்குள் இடம் பெற மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யூனைடெட், லிவர்பூல், அர்சனல், செல்ஸி மற்றும் டாட்டனம் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நேற்று மற்றும் இன்று நடந்த ப்ரிமியர் லீக் போட்டியில் பல முக்கியமானவை.

மான்செஸ்டர் யூனைடெட் அணியும் க்ரிஸ்டல் பாலஸ் அணிகளும் மோதிய போட்டியில் 3-1 என கோல் கணக்கில் மான்செஸ்டர் யூனைடெட் அணி வெற்றி பெற்றது. மான்செஸ்டர் யூனைடெட் அணிக்காக ஆட்டத்தின் 33 மற்றும் 52 வது நிமிடத்தில் லுகாகு இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். பதிலுக்கு 66 வது நிமிடத்தில் க்ரிஸ்டல் பாலஸ் அணியின் வார்ட் கோல் அடித்தார். இறுதியில் 83 வது நிமிடத்தில் யூனைடெட்  அணிக்காக யங் கோல் அடித்து, அணியை 3-1 அன கோல் கணக்கில் வெற்றி பெற வைத்தார்.

அர்சனல் – பவுர்னிமவுட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 5-1 என கோல் கணக்கில் அர்சனல் அசத்தல் வெற்றி பெற்றது. ஓசில், ஹென்ரிக் மிக்கிட்யாரியன், லாரண்ட் கொசியில்னி, அவ்பவ்மேயாங், அலக்சாண்ட்ரி ஆகியோர் அர்சனல் அணிக்காக கோல் அடித்தனர்.

லிவர்பூல் – வாட்ஃபோர்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியில், வாட்ஃபோர்ட் அணியை பந்தாடியது லிவர்பூல் அணி. மானே இரண்டு கோல், விர்ஜில் வான் டிஜிக் இரண்டு கோல், ஒரிகி ஒரு கோல் என அசத்த, லிவர்பூல் அணி 5-0 என கோல் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றது.

மான்செஸ்டர் சிட்டி அணியும் வெஸ்ட் ஹாம் அணிகளும் மோதி கொண்டன. இதில், அதிர்ஷ்டவசமாக பெனால்டி வாய்ப்பு மான்செஸ்டர் அணிக்கு கிட்டியது. அதனை சரியாக பயன்படுத்திய செர்கியோ அகரோ 59 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். இறுதியில் 1-0 என கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றது.

பெட்ரோவின் கோல் மற்றும் டாட்டனம் அணியின் கிரானின் சுய கோலால் 2-0 என கோல் கணக்கில் டாட்டனம் அணியை எளிதாக வென்றது செல்ஸி.

ப்ரிமியர் லீக் தொடரின் தரவரிசையில், 69 புள்ளிகளுடன் முதல் இடத்தில் லிவர்பூல் அணி உள்ளது. இரண்டாவது இடத்தில் 68 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி அணி உள்ளது. டாட்டனம், அர்சனல், மான்செஸ்டர் யூனைடெட் மற்றும் செல்ஸி முறையே மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. அந்த அணிகள் முறையே 60, 56, 55 மற்றும் 53 புள்ளிகள் பெற்றுள்ளன.

Comments
ஹைலைட்ஸ்
  • மான்செஸ்டர் யூனைடத் அணி 3-1 என கோல் கணக்கில் வெற்றி பெற்றது
  • அர்சனல் – பவுர்னிமவுட் போட்டியில் 5-1 என கோல் கணக்கில் வெற்றி பெற்றது
  • 1-0 என கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றது.
தொடர்புடைய கட்டுரைகள்
சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல போவது யார்?
சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல போவது யார்?
சி.எஸ்.கே லிவர்பூல் போல டெல்லிக்கு எதிராக ஆட வேண்டும்: விவ் ரிச்சர்ட்ஸ்
சி.எஸ்.கே லிவர்பூல் போல டெல்லிக்கு எதிராக ஆட வேண்டும்: விவ் ரிச்சர்ட்ஸ்
சாம்பியன் ஆகுமா லீவர்பூல்? பிரீமியல் லீக் அப்டேட்
சாம்பியன் ஆகுமா லீவர்பூல்? பிரீமியல் லீக் அப்டேட்
சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு யார் முன்னேறுவர்... பரபரப்பில் ப்ரிமியர் லீக்!
சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு யார் முன்னேறுவர்... பரபரப்பில் ப்ரிமியர் லீக்!
பிரீமியர் லீக் தொடர் அப்டேட்...!!!
பிரீமியர் லீக் தொடர் அப்டேட்...!!!
Advertisement