ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!

Updated: 26 July 2019 11:08 IST

ஃபிபா தரவரிசையில் முதலிடத்தில் பெல்ஜியம் அணி உள்ளது.

India Drop Two Places To 103 In Latest FIFA Rankings
கடந்த ஆண்டு இறுதியில் 97வது இடத்தில் இருந்தது இந்தியா அணி. © Twitter

சமீபத்திய கால்பந்து தரவரிசையை ஃபிபா வெளியிட்டது. இதில் இந்தியா கால்பந்து அணியானது இரண்டு இடங்கள் சரிவை கண்டுள்ளது. சமீபத்தில் நடந்த இண்டர்காண்டிணெண்டல் கோப்பை போட்டியில் இந்தியா அணியால் ஒரு வெற்றி கூட பெற முடியவில்லை. இதனாலே தரவரிசையில் 103 வது இடத்திற்கு தள்ளப்பட்டது இந்தியா.

தஜிகிஸ்தான் (2-4) , டிபிஆர் கொரியா (2-5) ஆகிய அணிகளுடன் தோல்வியையும் சிரியா அணியுடன் 1-1 என டிராவும் செய்தது இந்தியா அணி. ஏப்ரல் மாதம் 101 வது இடத்தில் இருந்த இந்தியா அணி ஐந்து புள்ளிகள் இழந்து 103 வது இடத்தை பெற்றது. கடந்த ஆண்டு இறுதியில் 97வது இடத்தில் இருந்தது இந்தியா அணி என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஃபிபா உலகக்கோப்பைக்கான ஆசிய இரண்டாவது தகுதி சுற்றுகள் துவங்கவுள்ளன. அதில் ஈ பிரிவில் இந்தியா அணி இடம் பெற்றுள்ளது. இந்தியா அணியுடன் பங்களாதேஷ் , ஓமன், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த போட்டிகள் செப்டம்பர் 5 முதல் ஜூன் 9, 2020 வரை நடக்கவுள்ளது.

ஃபிபா தரவரிசையில் முதலிடத்தில் பெல்ஜியம் அணி உள்ளது. கோபா அமெரிக்கா சாம்பியனான பிரேசில் அணி இரண்டாம் இடத்திலும் 2018 உலகக்கோப்பையை வென்ற பிரென்சு அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

Comments
ஹைலைட்ஸ்
  • 2022 உலகக்கோப்பைக்கான ஆசிய இரண்டாவது தகுதி சுற்றுகள் துவங்கவுள்ளன.
  • கோபா அமெரிக்கா சாம்பியனான பிரேசில் அணி இரண்டாம் இடத்தில் உள்ளனர்
  • 2018 உலகக்கோப்பையை வென்ற பிரென்சு அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
தொடர்புடைய கட்டுரைகள்
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பை: இந்தியா, சிரியா ஆட்டம் ட்ரா
இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பை: இந்தியா, சிரியா ஆட்டம் ட்ரா
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
Advertisement