Premier League: தடுமாறும் மான்செஸ்டர் யூனைடத் அணிக்கு மேலும் ஓர் பின்னடைவு

Updated: 18 October 2019 10:28 IST

பிரென்சு நாட்டை சேர்ந்த 26 வயதான பால் போக்பா, கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

Paul Pogba Out Of Manchester United Clash With Liverpool
தரவரிசையில் 12 வது இடத்தில் உள்ளது மான்செஸ்டர் யூனைடத் அணி © AFP

ப்ரீமியர் லீக் தொடரில் வரும் ஞாயிறு அன்று மான்செஸ்டர் யூனைடத் – லிவர்பூல் அணிகள் மோதவுள்ளனர். இந்த போட்டியில் மான்செஸ்டர் யூனைடத் அணியின் நட்சத்திர வீரரான பால் போக்பா பங்கேற்க மாட்டார் என மான்செஸ்டர் யூனைடத் அணியின் மேலாளர் ஒலே கன்னர் தெரிவித்துள்ளார்.

பிரென்சு நாட்டை சேர்ந்த 26 வயதான பால் போக்பா, கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். ‘போக்பாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கடினமாக பயிற்சி செய்தார். காயத்துடனே சில ஆட்டங்களில் அவர் விளையாடினார். அர்சனல் அணிக்கு எதிராக நடந்த போட்டிக்கு பின் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு சில வாரங்கள் ஓய்வு தேவை என்று தெரிகிறது' என ஒலே கன்னர் தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் யூனைடத் அணிக்கு மேலும் ஓர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கோல்கீப்பரான டேவிட் டி ஜீ காயத்தால் அவதிப்படுகிறார். லிவர்பூல் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் பங்கேற்பது சந்தேகம் தான்.

ப்ரீமியர் லீக் தரவரிசையில் 12 வது இடத்தில் உள்ளது மான்செஸ்டர் யூனைடத் அணி. வெறும் 9 புள்ளிகள் மட்டுமே பெற்று தடுமாறி வருகிறது மான்செஸ்டர் யூனைடத்.

அதே நேரம் லிவர்பூல் அணி 8 போட்டிகளில் 24 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மான்செஸ்டர் யூனைடத் – லிவர்பூல் அணிகளுக்கு இடையே 15 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • லிவர்பூல் அணி 8 போட்டிகளில் 24 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது
  • 12 வது இடத்தில் உள்ளது மான்செஸ்டர் யூனைடத் அணி
  • கோல்கீப்பரான டேவிட் டி ஜீ காயத்தால் அவதிப்படுகிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
Premier League: தடுமாறும் மான்செஸ்டர் யூனைடத் அணிக்கு மேலும் ஓர் பின்னடைவு
Premier League: தடுமாறும் மான்செஸ்டர் யூனைடத் அணிக்கு மேலும் ஓர் பின்னடைவு
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
மகுடம் சூடிய பிரான்சு அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
மகுடம் சூடிய பிரான்சு அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
4-3 கோல் கணக்கில் அர்ஜெண்டீனாவை வென்று காலிறுதிக்கு முன்னேறியது பிரான்சு
4-3 கோல் கணக்கில் அர்ஜெண்டீனாவை வென்று காலிறுதிக்கு முன்னேறியது பிரான்சு
Advertisement