பணம் பறிக்கும் நோக்கில் நெய்மர் மீது புகார் தந்த மாடல் மீது வழக்கு!

Updated: 11 September 2019 13:29 IST

கால்பந்து வீரர் நெய்மர் மீது பாலியல் புகார் அளித்த மாடல் நஜிலா மீது பணம் பறித்தல், புகழுக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளது.

Neymar Rape Accuser Charged With Extortion In Brazil
27 வயதான நெய்மர் காயத்திலிருந்து மீண்டு இனிதான் ஆட்டத்தை துவங்க உள்ளார்.  © AFP

சாவ் பாவ்லோ போலீஸ் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் மீது பாலியல் புகார் அளித்த மாடல் நஜிலா மீது பணம் பறித்தல், புகழுக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளது. நஜிலா, நெய்மர் மீது அளித்த புகர் போதிய ஆதாரம் இல்லாததால் கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நஜிலா மீது பணம் பறித்தல், புகழுக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளதா அரசுதரப்பு வக்கில்.

தனது வாதத்தின் முடிவை நீதிபதி முடிவுக்கு விட்டுள்ளார் அரசுதரப்பு வக்கில். உலகப்புகழ் பெற்ற நெய்மரை பாதிக்கும் வகையில் இந்த  வழக்கு உள்ளது என கூறினார்.

27 வயதான நெய்மர் காயத்திலிருந்து மீண்டு இனிதான் ஆட்டத்தை துவங்க உள்ளார். 

ஜூன் மாதத்துக்கு பிறகு சென்ற வெள்ளிக்கிழமை தான் நெய்மர் தனது முதல் போட்டியை ஆடினார்.கொலம்பியா உடனான ஆட்டத்தில் 2-2 என பிரேசில் ட்ரா செய்தது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பணம் பறிக்கும் நோக்கில் நெய்மர் மீது புகார் தந்த மாடல் மீது வழக்கு!
பணம் பறிக்கும் நோக்கில் நெய்மர் மீது புகார் தந்த மாடல் மீது வழக்கு!
பாலியல் புகாரில் நெய்மருக்கு தொடர்பில்லை - அட்டர்னி ஜெனரல்!
பாலியல் புகாரில் நெய்மருக்கு தொடர்பில்லை - அட்டர்னி ஜெனரல்!
பார்சிலோனாவிற்கு கம்-பேக் கொடுக்கிறாரா நெய்மர்?
பார்சிலோனாவிற்கு 'கம்-பேக்' கொடுக்கிறாரா நெய்மர்?
இணையத்தில் வைரலான நெய்மரின் 27வது பிறந்தநாள்!
இணையத்தில் வைரலான நெய்மரின் 27வது பிறந்தநாள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
Advertisement