பார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா?

Updated: 16 July 2019 11:49 IST

‘17’ நம்பர் க்ரீஸ்மேன்காக பார்சிலோனா ஒதுக்கியுள்ளது

Antoine Griezmann Trains For The First Time With Barcelona
கிளப் போட்டிகளில் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக ஐந்து ஆண்டுகளாக விளையாடி வந்தார் க்ரீஸ்மேன். © AFP

இன்றைய கால்பந்து உலகில் சிறந்த வீரர்கள் பட்டியலில் கட்டாயமாக இடம் பெறும் ஒரு வீரர் அண்டோயின் க்ரீஸ்மேன். கால்பந்தின் பிதாமகன்களாக கருதப்படும் ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோர் பல சாதனைகளை செய்திருந்தாலும் அவர்கள் இதுவரை ஃபிபா உலகக்கோப்பை வென்றதில்லை. ஆனால் க்ரீஸ்மேன் அந்த ஃபிபா உலகக்கோப்பையையும் வென்றுள்ளார்.

கிளப் மற்றும் தேசிய அணிகளிலும் வெற்றியை பதிவு செய்த ஒரு சில வீரர்களில் ஒருவர் க்ரீஸ்மேன்.

கிளப் போட்டிகளில் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக ஐந்து ஆண்டுகளாக விளையாடி வந்தார் க்ரீஸ்மேன். இந்நிலையில் அவரை 120 மில்லியன் யூரோ (135 மில்லியன் டாலர்) செலுத்தி வாங்கியுள்ளது பார்சிலோனா அணி.

அட்லெடிகோ மாட்ரிட் அணி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, சர்ச்சை கிளம்பியது. க்ரீஸ்மேன்க்கு 120 மில்லியன் யூரோக்கு மேல் மதிப்புள்ளதாக அட்லெடிகோ அணி கருதியது.

‘17' நம்பர் க்ரீஸ்மேன்காக பார்சிலோனா ஒதுக்கியுள்ளது. பார்சிலோனா அணியுடன் முதல் முறையாக பயிற்சி செய்துள்ளார் க்ரீஸ்மேன். ‘இந்நாளின் முதல் இரண்டு பயிற்சியில் நீடோ, பிரென்கி டி ஜாங், க்ரீஸ்மேன் ஆகியோர் பங்கேற்றனர்' என பதிவிட்டது பார்சிலோனா.

மெஸ்சி, லூயிஸ் சுவராஸ், பிலிப்பி கவுட்டினோ, ஆர்தர், விடால் ஆகியோ கோபா அமெரிக்கா தொடருக்கு பின்பு விடுமுறையில் சென்றிருப்பதால் இந்த பயிற்சியில் அவர்கள் இடம் பெறவில்லை.

பார்சிலோனா அணியானது சனிக்கிழமை ஜப்பான் சென்று பிரெண்ட்லி போட்டிகளில் விளையாடவுள்ளது. ஜூலை 23 ஆம் தேதி செல்ஸி அணியையும் அதன் பின் இனியஸ்தாவின் விசல் கோபே அணியுடனும் விளையாடவுள்ளது பார்சிலோனா.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Comments
ஹைலைட்ஸ்
  • க்ரீஸ்மேன் ஃபிபா உலகக்கோப்பையையும் வென்றுள்ளார்.
  • 120 மில்லியன் யூரோ (135 மில்லியன் டாலர்) செலுத்தி வாங்கியது பார்சிலோனா
  • பார்சிலோனா அணியுடன் முதல் முறையாக பயிற்சி செய்துள்ளார் க்ரீஸ்மேன்
தொடர்புடைய கட்டுரைகள்
பார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா?
பார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா?
மெஸ்சி பெனால்ட்டி....க்ரிஸ்மென் கோல்...லா லிகா அப்டேட்
மெஸ்சி பெனால்ட்டி....க்ரிஸ்மென் கோல்...லா லிகா அப்டேட்
மகுடம் சூடிய பிரான்சு அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
மகுடம் சூடிய பிரான்சு அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
கால்பந்து உலக கோப்பை 2018: ஆறாவது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது பிரான்சு அணி
கால்பந்து உலக கோப்பை 2018: ஆறாவது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது பிரான்சு அணி
உலகக்கோப்பை 2018: ஃபிரான்ஸ் vs பெரு எப்போது, எங்கு பார்க்கலாம்?
உலகக்கோப்பை 2018: ஃபிரான்ஸ் vs பெரு எப்போது, எங்கு பார்க்கலாம்?
Advertisement