சென்னையை வீழ்த்தி, ப்ளே ஆஃப் சுற்றை நோக்கி நகர்ந்த‌ மும்பை சிட்டி எஃப்சி

Updated: 07 December 2018 18:18 IST

10 போட்டிகளில் 20 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை நோக்கி முன்னேறி வருகிறது மும்பை சிட்டி எஃப்சி.

ISL: Mumbai Heap More Misery On Chennaiyin FC With 2-0 Win
மும்பை சிட்டி எஃப்டி தனது ஆறாவது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது. © Indian Super League

இந்தியன் சூப்பர் லீக்கின் மும்பை சிட்டி எஃப்சி தொடர்ந்து தோல்வியடையாமல் ஆடி வருகிறது. நடப்பு சாம்பியனனான சென்னையின் எஃப்சி அணியை 2-0 என்ற கணக்கில் மும்பையில் நடந்த போட்டியில், மும்பை சிட்டி எஃப்சி வீழ்த்தியது.

27வது நிமிடத்தில் ரெயாண்டரும், 55வது நிமிடத்தில் மெளடெளவும் கோல் அடித்தனர். இந்த வெற்றி மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது மும்பை சிட்டி எஃப்சி. 10 போட்டிகளில் 20 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை நோக்கி முன்னேறி வருகிறது.

மும்பை சிட்டி எஃப்டி தனது ஆறாவது தொடர் வெற்றியை பதிவு செய்த அதேவேளையில், சென்னை தான் ஆடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் தோற்றுள்ளது.

மும்பை, இந்தப் போட்டியை சிறப்பாக ஆரம்பித்தது. லூசியன் கோயன் அடித்த ஷாட் கம்பத்துக்கு மேல் பறந்தது. கார்லஸ் சலோமின் ஷாட்டை மும்பை கேப்டன் டேக்கிள் செய்தது என மும்பை அபாரமாக ஆடிவந்தது. 

முதல்பாதி ஆட்டத்தில் 27வது நிமிடத்தில், ரெயாண்டர் அடித்த பந்து கோஷை தாண்டி கோல் ஆனது. 55வது நிமிடத்தில் மும்பை அடித்த பந்து கோல் வளையத்துக்குள் நுழைய மும்பை 2-0 என்று முன்னிலை பெற்றது. 

அதன் பின் மும்பை சென்னை அணியை கோல் அடிக்க விடாமல் பந்தை வைத்திருக்க, சென்னையின் முயற்சிகளும் வீணானது. அதனால் மும்பை 2-0 என்ற கணக்கில் ஆட்டத்தை வென்றது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மும்பை அணியை வென்ற எப்சி கோவா - ஐஎஸ்எல் அப்டேட் !!
மும்பை அணியை வென்ற எப்சி கோவா - ஐஎஸ்எல் அப்டேட் !!
சென்னையை வீழ்த்தி, ப்ளே ஆஃப் சுற்றை நோக்கி நகர்ந்த‌ மும்பை சிட்டி எஃப்சி
சென்னையை வீழ்த்தி, ப்ளே ஆஃப் சுற்றை நோக்கி நகர்ந்த‌ மும்பை சிட்டி எஃப்சி
Advertisement