"எடன் ஹசார்டை ஏன் நீக்கினேன்" விளக்கும் செல்ஸே பயிற்சியாளர்

Updated: 03 May 2019 19:34 IST

யூரோப்பா லீக் அரையிறுதியின் ஃபர்ஸ்ட் லெக்கில் 1-1 என்று என்ட்ராச்ட் அணியுடன் ட்ரா செய்தது. 

Eintracht Frankfurt vs Chelsea: Maurizio Sarri Defends Benching Eden Hazard Europa League Stalemate
எடன், 10 போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடியுள்ளார் என்றும் சர்ரி தெரிவித்துள்ளார்.  © AFP

செல்ஸே அணியின் பயிற்சியாளர் "மவுரிஸியோ சர்ரி அணியிலிருந்து எடன் ஹசார்ட்டை நீக்கியது சரியே" என்று வாதிட்டுள்ளார். அதற்கு அவர்களது அணி கோப்பையை வெல்ல வேண்டும். அதற்காக இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். யூரோப்பா லீக் அரையிறுதியின் ஃபர்ஸ்ட் லெக்கில் 1-1 என்று என்ட்ராச்ட் அணியுடன் ட்ரா செய்தது.  பெட்ரோவின் முதல் பாதி சமன் செய்யும் கோல் ஆறுதல் தந்த நிலையில், சர்ரி அணியின் நலனுக்காக அவரை அணியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.

எடன், 10 போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடியுள்ளார் என்றும் சர்ரி தெரிவித்துள்ளார். 

"ஒரு சீசனில் ஒரு வீரர் 70-75 போட்டிகளை தொடர்ச்சியாக ஆடுவது என்பது முடியாத காரியம். ஓய்வு என்பது கட்டாயம் தேவை. குறைந்தப்டசம் 90 நிமிடங்களாவது தேவை" என்று கூறியுள்ளார்.

மேலும், செல்ஸே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டும். இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு அணி சிக்கலான சூழலில் இருந்துள்ளதாகவும், தற்போது டாப் நான்கு அணிகளில் ஒன்றாக அரையிருதியில் இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.

முதல் பாதியில் அணி சிறு தவறுகளை செய்ததே ப்ரான்க்பர்ட் அணியுடன் சமன் செய்ய காரணம். அடுத்த 70 நிமிடத்தை தங்கள் கையிலேயே ஆட்டத்தை வைத்திருப்பதாக கூறினார் 

ப்ரான்க்பர்ட் அணி பெனால்டி வாய்ப்புகளை வீணடித்தது. பெர்ணாண்டஸ் கூறும் போது '' ப்ரான்க்பர்ட் இதுபோன்ற பெரிய அணியோடு சமன் செய்தது பெரிய விஷயம்" என்றார்.

"செல்ஸே எப்போதும் சிறந்த அணி தான். ஆனாலும் எல்லாமே சாத்தியம் தான் நாங்கள் முயற்சி செய்வோம்" என்று ப்ரான்க்பர்ட் கூறியுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
செல்சியின் கம்-பேக், பார்சிலோனாவின் டிரா - சாம்பியன்ஸ் லீக் அப்டேட்
செல்சியின் கம்-பேக், பார்சிலோனாவின் டிரா - சாம்பியன்ஸ் லீக் அப்டேட்
பர்ன்லே vs செல்ஸியா பிரீமியர் லீக்: எங்கு, எப்போது காணலாம்?
பர்ன்லே vs செல்ஸியா பிரீமியர் லீக்: எங்கு, எப்போது காணலாம்?
செல்சி அணியின் தலைமை பயிற்சியாளர் இவரா? - சந்தோஷத்தில் ரசிகர்கள்...!
செல்சி அணியின் தலைமை பயிற்சியாளர் இவரா? - சந்தோஷத்தில் ரசிகர்கள்...!
உலகக் கோப்பையை வெல்ல கோலிக்கு செல்ஸே வீரரின் வாழ்த்து!
உலகக் கோப்பையை வெல்ல கோலிக்கு செல்ஸே வீரரின் வாழ்த்து!
செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!
செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!
Advertisement