பரபரப்பின் உச்சம் தொட்ட 'கோப்பா டெல் ரே'!

Updated: 07 February 2019 16:34 IST

தசை பிடிப்பால் அவதிபட்டு வரும் மெச்ஸி, மாற்று வீரராக தான் பார்சிலோனா அணிக்கு களமிறங்கினார்

Lionel Messi Unable To Inspire Barcelona Winner As Real Madrid Hold On For Draw
தசை பிடிப்பால் மெச்ஸி அவதிபடுகிறார் © AFP

கோப்பா டெல் ரே கோப்பைக்கான அரையிறுதி போட்டியில் பார்சிலோனா – ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. பார்சிலோனா – ரியல் மாட்ரிட் அணிகள் மோதும் போட்டிகள் ‘எல் கிளாசிக்கோ' என கூறப்படும்.

தசை பிடிப்பால் அவதிபட்டு வரும் மெச்ஸி, மாற்று வீரராக தான் பார்சிலோனா அணிக்கு களமிறங்கினார். ரியல் மாட்ரிட் அணிக்கும் நட்சத்திர வீரர் பாலே மாற்று வீரராக தான் களமிறங்கினார்.

ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக வாஸ்க்வஸ் முதல் கோலை அடித்தார். பார்சிலோனா எவ்வளவு முயற்சி செய்தும் ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என முன்னிலையில் ரியல் மாட்ரிட் இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், பார்சிலோனாவிற்காக மால்கம் கோல் அடித்தார். ஆட்டத்தின் 57 வது நிமிடத்தில் மால்கம் கோல் அடித்து அசத்தினார்.

இறுதியில் 1-1 என சமனிலையில் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இவ்விறு அணிகளுக்கு இடையேயான இரண்டவாது அரையிறுதி போட்டி பிப்ரவரி 28 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • 1-1 என சமனிலையில் ஆட்டம் முடிந்தது
  • மெச்ஸி மாற்று வீரராக களமிறங்கினார்
  • மறுபடியும் இவ்விறு அணிகளும் பிப்ரவரி 28 ஆம் தேதி மோதுகின்றனர்
தொடர்புடைய கட்டுரைகள்
Messi: லா லிகா தொடரில் மெஸ்சிக்கு காயம்...!
Messi: லா லிகா தொடரில் மெஸ்சிக்கு காயம்...!
FIFA: ரொனால்டோவை வீழ்த்தி சிறந்த வீரர் விருதினை வென்ற மெஸ்சி
FIFA: ரொனால்டோவை வீழ்த்தி சிறந்த வீரர் விருதினை வென்ற மெஸ்சி
புற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் கால்பந்து பயிற்சியாளரின் மகள்!
புற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் கால்பந்து பயிற்சியாளரின் மகள்!
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
பார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா?
பார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா?
Advertisement