'உண்மையிலே இவர் மனிதர் தானா' - மெஸ்ஸியின் அசத்தல் கோல் வீடியோ

Updated: 24 February 2019 14:15 IST

கால்பந்து என்னும் விளையாட்டு இருக்கும் வரை மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புகழும் நிலைத்து இருக்கும்

Lionel Messi Scores A Stunning Volley To Prove That He Is The GOAT - Watch
மெஸ்ஸி அடிக்கும் 50 வது ஹாட்ரிக் கோல் இதுவாகும் © AFP

கால்பந்து என்னும் விளையாட்டு இருக்கும் வரை மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புகழும் நிலைத்து இருக்கும். ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர் இல்லை என்பதை ஒவ்வொரு போட்டியிலும் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ நிரூபித்து வருகின்றனர்.

அவர்களின் ஆட்டத்தை பார்க்கும் போது உண்மையிலே அவர்கள் மனிதர்களா என்ற சந்தேகம் வரும்.

லா லிகா தொடரின் நேற்றைய போட்டியில், பார்சிலோனாவும் செவிலா அணிகளும் மோதின. இந்த போட்டியில் தன் முழு திறமையையும் வெளிப்படுத்தி அசத்தினார் மெஸ்ஸி.

48 அடி தூரத்தில் இருந்து பந்தை கச்சிதமாக கோலாக மாற்றி அசத்தினார் மெஸ்ஸி. இந்த போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்தார் மெஸ்ஸி. அவரின் 50 வது ஹாட்ரிக் இதுவாகும்.

மெஸ்ஸி இந்த ஆண்டின் லா லிகா தொடரில் இதுவரை 23 போட்டிகளில் 25 கோல் அடித்து முதல் இடத்தில் உள்ளார். லா லிகா தவிர சாம்பியன் லீக் தொடரில் 6 கோல்கள் அடித்துள்ளார்.

மெஸ்ஸியின் மெர்சலான கோல் வீடியோ:

 

 

இந்த போட்டியில் 4-2 என கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. மெஸ்ஸி 3 கோல்களும் சுவாரஸ் ஒரு கோலும் அடித்தனர்.

‘கடந்த சில போட்டிகளாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. இந்த போட்டியில் நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்' என வெற்றியை குறித்து மெஸ்ஸி தெரிவித்தார்.

 

(With AFP Inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • 4-2 என கோல் கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது
  • ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் மெஸ்ஸி
  • இந்த ஆண்டு லா லிகாவில் மெஸ்ஸி அடிக்கும் 25வது கோல் இது
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி
மற்றுமொரு லா லிகா போட்டி, மற்றுமொரு மெஸ்ஸி மேஜிக்...!!!
மற்றுமொரு லா லிகா போட்டி, மற்றுமொரு மெஸ்ஸி மேஜிக்...!!!
'உண்மையிலே இவர் மனிதர் தானா' - மெஸ்ஸியின் அசத்தல் கோல் வீடியோ
மெஸ்சி பெனால்ட்டி....க்ரிஸ்மென் கோல்...லா லிகா அப்டேட்
மெஸ்சி பெனால்ட்டி....க்ரிஸ்மென் கோல்...லா லிகா அப்டேட்
ரொனால்டோவிற்கு பெரும் அபராதம் விதித்த நீதிமன்றம்; ஏன் தெரியுமா?
ரொனால்டோவிற்கு பெரும் அபராதம் விதித்த நீதிமன்றம்; ஏன் தெரியுமா?
Advertisement