மெஸ்சி பெனால்ட்டி....க்ரிஸ்மென் கோல்...லா லிகா அப்டேட்

Updated: 18 February 2019 16:36 IST

அடுத்த போட்டியில் சாம்பியன் லீக் தொடரில் லயான் அணியை எதிர்கொள்கிறது பார்சிலோனா

Lionel Messi Penalty Lifts Barcelona As Antoine Griezmann Eclipses Fernando Torres
மெஸ்சியின் பெனால்டியால் பார்சிலோனா வெற்றி பெற்றது © AFP

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா – ரியல் வாலாடோலிட் அணிகள் மோதின. சமீபகாலமாக தொடை வலியால் அவதிப்பட்டு வருகிறார் மெஸ்சி.

இந்த போட்டியில், பார்சிலோனாவிற்காக மெஸ்சி களமிறங்கினார். இந்த போட்டியில் இரண்டு பெனால்டி வாய்ப்புகள் மெஸ்சிக்கு கிடைத்தது. அதில் ஒன்றை மட்டுமே கோலாக மாற்றினார் மெஸ்சி.

இறுதியில், 1-0 என கணக்கில் ரியல் வாலாடோலிட் அணியை பார்சிலோனா வென்றது. இதன் மூலம் லா லிகா தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

‘இந்த போட்டியில் நாங்கள் எங்கள் முழு திறமைக்கு விளையாடவில்லை. இந்த போட்டியில் நடந்த ஒரே நல்ல விஷயம், நாங்கள் வெற்றி பெற்றது தான்' என்றார் பார்சிலோனா அணியின் பிக்யூ.

அடுத்த போட்டியில் சாம்பியன் லீக் தொடரில் லயான் அணியை எதிர்கொள்கிறது பார்சிலோனா.

லா லிகாவின் மற்றொரு போட்டியில், அட்லெட்டிகோ மாட்ரித் அணியும் ரயோ வேளிகனோ அணிகளும் மோதின.

இதில் அட்லெட்டிகோ அணியின் க்ரிஸ்மென் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கோல் அடித்து அட்லெட்டிகோவை வெற்றி பெற செய்தார். 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோ மாட்ரித் அணி வெற்றி பெற்றது.

அடுத்த போட்டியில் சாம்பியன் லீக் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின்  ஜுவெண்டஸ் அணியுடன் மோதவுள்ளது அட்லெட்டிகோ மாட்ரித்.

Comments
ஹைலைட்ஸ்
  • மெஸ்சி தனது பெனால்டி மூலம் பார்சிலோனாவை வெற்றி பெற செய்தார்
  • அட்லெட்டிகோ அணிக்காக க்ரிஸ்மேன் கோல் அடித்தார்
  • சாம்பியன் லீக் போட்டி அடுத்தது நடக்கவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
பார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா?
பார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா?
பார்சிலோனாவிற்கு
பார்சிலோனாவிற்கு 'கம்-பேக்' கொடுக்கிறாரா நெய்மர்?
ஊழலுக்கு எதிராக ராப் பாடும் கால்பந்து வீரர் ரொனால்டினோ
ஊழலுக்கு எதிராக ராப் பாடும் கால்பந்து வீரர் ரொனால்டினோ
சாம்பியன்ஸ் லீக் காலிறுதி: யூனைடெடை வீழ்த்திய பார்சிலோனா!
சாம்பியன்ஸ் லீக் காலிறுதி: யூனைடெடை வீழ்த்திய பார்சிலோனா!
மற்றுமொரு லா லிகா போட்டி, மற்றுமொரு மெஸ்ஸி மேஜிக்...!!!
மற்றுமொரு லா லிகா போட்டி, மற்றுமொரு மெஸ்ஸி மேஜிக்...!!!
Advertisement