Messi: லா லிகா தொடரில் மெஸ்சிக்கு காயம்...!

Updated: 25 September 2019 11:50 IST

La liga: நேற்றைய ஆட்டத்தில் ஆண்டனியோ க்ரிஸ்மேன், ஆர்தர் மெலோ ஆகியோர் பார்சிலோனா அணிக்காக கோல் அடித்தனர்.

Barcelona vs Villarreal: Lionel Messi Suffers Injury, Barcelona Beat Villarreal 2-1
Messi: மெஸ்சியின் காயம் சிறிது தான் என பயிற்சியாளர் கூறினார் © AFP

2019 - 20 லா லிகா சீசனில் பார்சிலோனா அணிக்காக நேற்று தான் தனது முதல் போட்டியில் பங்கேற்றார் மெஸ்சி. வில்லரியல் அணிக்கு எதிரான இந்த போட்டியில் பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றிருந்தாலும் யாரும் எதிர்பாராத விதமாக மெஸ்சிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மெஸ்சிக்கு இடது காலில் காயம் ஏற்பட்டதால் அவரால் போட்டியின் இடைவேளைக்கு பின் விளையாட முடியவில்லை. மெஸ்சி ஆகஸ்ட் மாதம் முதல் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

லா லிகாவில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பார்சிலோனா அணி 7 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளது. வரும் சனிக்கிழமை கெதப்பி அணியை எதிர்கொள்கிறது பார்சிலோனா. அதனை தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் தொடரில் இண்டர் மிலன் அணியை சந்திக்க இருக்கிறது பார்சிலோனா.

‘மெஸ்சிக்கு ஏதேனும் நடந்தால் களத்தில் மட்டும் அல்ல பார்வையாளர்களும் அதிர்ச்சியடைகின்றனர். மெஸ்சிக்கு ஏற்பட்டுள்ள காயம் சிறிது தான் என நம்புகிறோம்' என்றார் பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் வால்வெர்டி.

நேற்றைய ஆட்டத்தில் ஆண்டனியோ க்ரிஸ்மேன், ஆர்தர் மெலோ ஆகியோர் பார்சிலோனா அணிக்காக கோல் அடித்தனர். ‘பார்சிலோனாவின் ஆட்டம் வித்தியாசமாக உள்ளது. விரைவில் நான் அதனை முழுமையாக கற்று கொள்வேன்' என்றார் க்ரிஸ்மேன்.

இந்த வெற்றியின் மூலம் லா லிகா புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ரியல் மாட்ரித் அணியை விட பார்சிலோன ஒரு புள்ளி பின் தங்கியுள்ளது.

நேற்றைய போட்டியில் மெஸ்சி அடித்த கார்னர் கிக்கை கோலாக மாற்றி அசத்தினார் க்ரிஸ்மேன். பார்சிலோனா அணிக்காக இந்த வருடம் ஒப்பந்தமாகியுள்ள க்ரிஸ்மேன் இதுவரை இந்த லா லிகா சீசனில் 3 கோல்கள் அடித்துள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ரியல் மாட்ரித் அணியை விட பார்சிலோன ஒரு புள்ளி பின் தங்கியுள்ளது.
  • க்ரிஸ்மேன் இதுவரை இந்த லா லிகா சீசனில் 3 கோல்கள் அடித்துள்ளார்.
  • 5 போட்டிகளில் விளையாடியுள்ள பார்சிலோனா அணி 7 புள்ளிகள் எடுத்துள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
Lionel Messi: அர்ஜெண்டினா அணிக்கு கம்-பேக் கொடுக்கும் மெஸ்சி!!
Lionel Messi: அர்ஜெண்டினா அணிக்கு கம்-பேக் கொடுக்கும் மெஸ்சி!!
"ரொனால்டோ vs மெஸ்ஸி: இருவரில் யாரை பிடிக்கும்?" - கோலியின் பளிச் பதில்!
"ரொனால்டோ vs மெஸ்ஸி: இருவரில் யாரை பிடிக்கும்?" - கோலியின் பளிச் பதில்!
Messi: லா லிகா தொடரில் மெஸ்சிக்கு காயம்...!
Messi: லா லிகா தொடரில் மெஸ்சிக்கு காயம்...!
FIFA: ரொனால்டோவை வீழ்த்தி சிறந்த வீரர் விருதினை வென்ற மெஸ்சி
FIFA: ரொனால்டோவை வீழ்த்தி சிறந்த வீரர் விருதினை வென்ற மெஸ்சி
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
Advertisement