பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் சிக்கிய மான்செஸ்டர் யூனைடடின் மாஜி மேலாளர்!

Updated: 06 February 2019 16:36 IST

வரி ஏய்ப்பு விவகாரத்தில் ரொனால்டோ மற்றும் மெஸ்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Jose Mourinho Avoids Jail But Hit By Fine For Tax Fraud In Spain
2011 மற்றும் 2012 ஆண்டு வரி ஏய்ப்பில் மொரின்ஹோ ஈடுப்பட்டார் © AFP

பிரபல கால்பந்து அணிகளான ரியல் மாட்ரிட், செல்சி, மான்செஸ்டர் யூனைடட் ஆகியவற்றின் மேலாளராக இருந்தவர் ஜோஸ் மொரின்ஹோ.

இவர், 2010 முதல் 2013 வரை ரியல் மாட்ரிட் அணிக்கு மேலாளராக இருந்தார்.

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அவர் வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டதாக கூறப்பட்டது. 2011 ஆம் ஆண்டு 1.6 மில்லியன் யூரோ மற்றும் 2012 ஆம் ஆண்டு 1.7 மில்லியன் யூரோ மொரின்ஹோ வரி ஏய்ப்பு செய்தது நிருபிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அவருக்கு ஒரு ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் ஸ்பெயினில் 2 ஆண்டுகளுக்கு குறைவாக சிறை தண்டனை வழங்கப்பட்டால், அதற்கு நிகராக அபராதம் செலுத்தி சிறை செல்லாமல் இருக்கலாம்.

ஜோஸ் மொரின்ஹோவும் ஒரு ஆண்டு சிறை தண்டனைக்கு பதிலாக 1,82,500 யூரோ அபராதமாக கட்டவுள்ளார். அது போக அவருக்கு 1.98 மில்லியன் யூரோ கட்ட உத்திரவிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 18 கோடி ஆகும்

ஏற்கனவே இந்த வரி ஏய்ப்பு விவகாரத்தில் ரொனால்டோ மற்றும் மெஸ்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • ரியல் மாட்ரிட், செல்சி, மான்செஸ்டர் யூனைடட் அணிகளின் மேலாளராக இருந்தார்
  • இரண்டு மில்லியன் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது
  • 2011,2012 ஆண்டுகளில் வரி ஏய்ப்பில் மொரின்ஹோ ஈடுப்பட்டுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
மோரின்ஹோவிற்கு மில்லியன்களில் செலவிட்ட மான்செஸ்டர் யூனைடத்
மோரின்ஹோவிற்கு மில்லியன்களில் செலவிட்ட மான்செஸ்டர் யூனைடத்
பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் சிக்கிய மான்செஸ்டர் யூனைடடின் மாஜி மேலாளர்!
பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் சிக்கிய மான்செஸ்டர் யூனைடடின் மாஜி மேலாளர்!
Advertisement