இணையத்தில் வைரலான நெய்மரின் 27வது பிறந்தநாள்!

Updated: 05 February 2019 13:34 IST

பிறந்தநாளன்று நெய்மர் டானி ஆல்வ்ஸ், கெய்லியன் எம்பாபேயுடன்  சிவப்பு நிற உடையணிந்து கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் கொண்டாடியுள்ளார். இது இணையதளத்தில் உடனடியாக வைரலானது.

Neymar Birthday: Brazil Star Celebrates 27th Birthday On Crutches
காயம் காரணமாக 10 வார ஓய்வில் இருக்கிறார் நெய்மர். © AFP

நெய்மர் தனது 27வது பிறந்தநாளை கால்களில் ஏற்பட்டுள்ள காயத்தோடு கொண்டாடியுள்ளார். இந்த காயத்தால் இரவில் தூக்கமில்லாமல் நெய்மர் தவித்து வருகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியது. காயம் காரணமாக 10 வார ஓய்வில் இருக்கிறார் நெய்மர். பிறந்தநாளன்று நெய்மர் டானி ஆல்வ்ஸ், கெய்லியன் எம்பாபேயுடன்  சிவப்பு நிற உடையணிந்து கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் கொண்டாடியுள்ளார். இது இணையதளத்தில் உடனடியாக வைரலானது. அவற்றில் சில ட்விட்கள் இதோ...

நெய்மர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக மாற்று சிகிச்சையில் ஈடுபடபோவதாக பிஎஸ்ஜி அணி அறிவித்துள்ளது. ஒருவேளை பிஎஸ்ஜி காலிறுதிக்கு தகுதி பெற்றால் காலிறுதியில் நெய்மர் அணியில் இணைவார் என்று கூறபட்டுள்ளது. 

அனைத்து பரிசோதனைகளுக்கு பிறகு நெய்மர் இந்த சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார். அதன்படி நெய்மர் சிகிச்சை முடிந்து 10 வாரத்தில் அணிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் ப்ரெஞ்ச் கப் போட்டியில் ஸ்ட்ராஸ்போர்க் அணிக்கு எதிராக பிஎஸ்ஜி 2-0 என்ற கணக்கில் வென்றது அப்போது நெய்மருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Comments
ஹைலைட்ஸ்
  • காயம் காரணமாக 10 வார ஓய்வில் இருக்கிறார் நெய்மர்
  • நெய்மர் தனது 27வது பிறந்தநாளை காயத்தோடு கொண்டாடியுள்ளார்
  • பிஎஸ்ஜி 2-0 என்ற கணக்கில் வென்றபோது, நெய்மருக்கு காயம் ஏற்பட்டது
தொடர்புடைய கட்டுரைகள்
இணையத்தில் வைரலான நெய்மரின் 27வது பிறந்தநாள்!
இணையத்தில் வைரலான நெய்மரின் 27வது பிறந்தநாள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
#Neymarchallenge: ட்ரெண்ட் ஆகி வரும் நெய்மரின்
#Neymarchallenge: ட்ரெண்ட் ஆகி வரும் நெய்மரின் 'காபி கேட்'
நெய்மர் களத்தில் நடிக்கும் காட்சிகளை கிண்டல் செய்த சிறுவர்கள்
நெய்மர் களத்தில் நடிக்கும் காட்சிகளை கிண்டல் செய்த சிறுவர்கள்
உலக கோப்பை 2018: நெய்மரின் செயலுக்கு ஆதரவு கூறும் ரொனால்டோ
உலக கோப்பை 2018: நெய்மரின் செயலுக்கு ஆதரவு கூறும் ரொனால்டோ
Advertisement