சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!

Updated: 10 July 2019 13:46 IST

அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 70 கோல் அடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார் சுனில்

Sunil Chhetri Named AIFF Player Of Year For Sixth Time
சுனில் சேத்ரி ஆறாவது முறையாக ஏஐஎப்எப் விருதினை பெற்று சாதனை படைத்துள்ளார் © AFP

இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் அடையாளமாக திகழ்பவர் சுனில் சேத்ரி. இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில், சர்வதேச போட்டிகளில் மெஸ்சியை விட அதிக கோல் அடித்துள்ளார்.

தற்போது விளையாடும் வீரர்களில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 70 கோல் அடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார் சுனில். முதலிடத்தில் 149 கோல்களுடன் ரொனால்டோ உள்ளார். மெஸ்சி 68 கோல்கள் அடித்துள்ளார்.

சுனில் சேத்ரி ஆறாவது முறையாக ஏஐஎப்எப் விருதினை பெற்று சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே ஏஐஎப்எப் சிறந்த ஆண்கள் கால்பந்து வீரர் விருதினை சுனில் சேத்ரி 2007, 2011, 2013, 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘விருதிற்காக நான் எப்போதும் விளையாடுவதில்லை. இருப்பினும் எனது கடின உழைப்பிற்கு ஓர் அங்கிகாரமாக இந்த விருதினை நான் எண்ணுகிறேன். மேலும் இந்த விருதுக்கு ஹீரோ ஐ லீக் மற்றும் ஹீரோ ஐஎஸ்எல் பயிற்சியாளர்கள் ஆகியோர் வாக்களித்து என்னை தேர்ந்தெடுத்தது சிறப்பான தருணம்' என்றார் சுனில் சேத்ரி. ஐஎஸ்எல் தொடரில் பெங்களூர் எப்சி அணிக்காக விளையாடுகிறார் சுனில் சேத்ரி.

ஏஐஎப்எப் சிறந்த பெண்கள் கால்பந்து வீரர் விருதினை ஆஷல்தா தேவியும் ஏஐஎப்எப் சிறந்த வளர்ந்து வரும் கால்பந்து வீரர் விருதினை தங்மி கிரேஸும் பெற்றனர். சிறந்த கால்பந்து வளர்ச்சி விருதினை ஜம்மூ மற்றும் காஷ்மீர் கால்பந்து குழுமமும் சிறந்த நடுவர் விருதினை தமிழகத்தின் ஆர் வெங்கடேஷும் வென்றனர்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Comments
ஹைலைட்ஸ்
  • முதலிடத்தில் 149 கோல்களுடன் ரொனால்டோ உள்ளார்
  • 70 கோல் அடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார் சுனில்
  • ஏஐஎப்எப் சிறந்த பெண்கள் கால்பந்து வீரர் விருதினை ஆஷல்தா தேவி வென்றார்
தொடர்புடைய கட்டுரைகள்
WC 2022 Qualifiers: இந்தியா - வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது
WC 2022 Qualifiers: இந்தியா - வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
ஆர்சிபி பயிற்சியின் போது கோலியை சந்தித்த பிரபலம்!
ஆர்சிபி பயிற்சியின் போது கோலியை சந்தித்த பிரபலம்!
Advertisement