Listen to the latest songs, only on JioSaavn.com
 

World Cup Qualifiers: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?

Updated: 15 October 2019 17:08 IST

2022 FIFA World Cup Qualifiers:நாளை நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று உலகக்கோப்பை தகுதி சுற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

India vs Bangladesh, World Cup Qualifiers: India Return To Kolkata, Eye First Win In Qualifying Campaign
நாளை கொல்கத்தாவில் வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிரது இந்தியா அணி © Twitter

2022 பிபா உலகக் கோப்பைகான தகுதி சுற்று போட்டியில் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இதுவரை இரண்டு தகுதி சுற்று போட்டிகள் விளையாடியுள்ளது இந்தியா. ஓமன், கத்தார் அணிகளுக்கு எதிராக தகுதி சுற்று போட்டிகளில் விளையாடிய இந்தியா அணி ஒரு தோல்வி, ஒரு டிரா பதிவு செய்துள்ளது.

ஆசிய சாம்பியனான கத்தார் அணிக்கு எதிராக டிரா செய்தது இந்தியா அணி. தோகாவில் நடந்த அந்த போட்டியில் இந்தியாவின் கோல் கீப்பர் குர்பீத் சிங் அட்டகாசமாக விளையாடினார். அந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி விளையாடவில்லை.

முன்னதாக குவஹாத்தியில் ஓமன் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்தியா அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் தனது மூன்றாவது தகுதி சுற்று போட்டியில் வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது இந்தியா.

சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் இந்த போட்டி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நட்பு ரீதியான போட்டியில் விளையாடிய போது இந்தியாவின் முக்கிய வீரரான சந்தேஷ் ஜிங்கன் காயம் ஏற்பட்டதால் நாளை வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார்.

‘சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை நாங்கள் தேர்ந்தெடுக்க உள்ளோம். நாங்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளோம். கொல்கத்தாவிற்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்' என்றார் மேலாளர் இகோர் ஸ்திமாக்.

ஜிங்கனுக்கு பதிலாக இந்தியா அணியில் நரேந்திர கஹோத் அல்லது அனஸ் எதடோதிகா சேர்க்கப்படவுள்ளனர். ஜிங்கன் 6 மாதங்கள் விளையாட மாட்டார் என தெரிகிறது.

ஐந்து அணிகள் உடைய டேபிளில் நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா. ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ள இந்தியா அணி, நாளை நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று உலகக்கோப்பை தகுதி சுற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Comments
ஹைலைட்ஸ்
  • 8 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவில் நடக்கவிருக்கிறது இந்த போட்டி
  • சந்தேஷ் ஜிங்கன் காயம் ஏற்பட்டதால் நாளை விளையாட மாட்டார்.
  • ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது இந்தியா அணி
தொடர்புடைய கட்டுரைகள்
“ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை கேரம் விளையாட்டில் வெல்ல முடியும்” - சுனில் சேத்ரி
“ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை கேரம் விளையாட்டில் வெல்ல முடியும்” - சுனில் சேத்ரி
World Cup Qualifiers: கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா அணி...ஆப்கானிஸ்தானை வீழ்த்துமா?
World Cup Qualifiers: கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா அணி...ஆப்கானிஸ்தானை வீழ்த்துமா?
WC 2022 Qualifiers: இந்தியா - வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது
WC 2022 Qualifiers: இந்தியா - வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது
World Cup Qualifiers: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
World Cup Qualifiers: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
Advertisement