சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா

Updated: 14 May 2019 19:09 IST

நடப்பு சாம்பியனான ப்ளூ டைகர்ஸ்  அணி கென்யாவை வீழ்த்தி 2018ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் ஹீரோவாக சுனில் சேத்ரி விளங்கினார்.

India To Host Syria, Tajikistan, DPR Korea In Intercontinental Cup
நடப்பு சாம்பியனான ப்ளூ டைகர்ஸ்  அணி கென்யாவை வீழ்த்தி 2018ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. © AFP

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இன்டர்கான்டினென்டல் கோப்பையின் இரண்டாவது சீசனில் சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளது. இந்த தொடர் ஜூலை 7ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த போட்டிகளுக்கான மைதானங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நடப்பு சாம்பியனான ப்ளூ டைகர்ஸ்  அணி கென்யாவை வீழ்த்தி 2018ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் ஹீரோவாக சுனில் சேத்ரி விளங்கினார்.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு செயலாளர் குஷால் தாஸ் கூறும்போது, "இந்திய அணியான ப்ளூ டைகர்ஸுக்கு இது ஒரு வாழ்வா சாவா ஆட்டமாக தான் பார்க்கப்படும் . ஏனென்றால் இது செம்படம்பரில் நடக்கும் ஃபிபா உலகக் கோப்பை தகுதிக்கு முன்னோட்டமாக இருக்கும். 

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இந்திய ஆண்கள் அணிக்கான தொடர் விவரங்களை உறுதி செய்துள்ளது. இந்திய தேசிய அணி தாய்லாந்தின் கிங் கோப்பையில் முதல் போட்டியில் தாய்லாந்து அல்லது வியட்னாமை எதிர்கொள்ளும். இது 2022 உலகக் கோப்பைக்கான தகுதி போட்டிகளோடு ஆரம்பிக்கும்" என்றார்.

அனைத்து நான்கு அணிகளும் ரவுண்ட் ராபின் முறைப்படி ஆடி முதல் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
WC 2022 Qualifiers: இந்தியா - வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது
WC 2022 Qualifiers: இந்தியா - வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது
World Cup Qualifiers: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
World Cup Qualifiers: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பை: இந்தியா, சிரியா ஆட்டம் ட்ரா
இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பை: இந்தியா, சிரியா ஆட்டம் ட்ரா
Advertisement