இந்தியா, 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஃபிபா உலகக் கோப்பை நடத்த முடிவு!

Updated: 16 March 2019 13:06 IST

இந்த முடிவை எடுக்க 2017ம் ஆண்டு இந்தியா 17 வயதுகுட்பட்டோருக்கான ஆண்கள் உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியிருந்ததே காரணமானது. 

India To Host 2020 FIFA U-17 Women
17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஃபிபா உலகக்கோப்பையை 2020ம் ஆண்டு இந்தியா நடத்தவுள்ளது. © Twitter

17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஃபிபா உலகக்கோப்பையை 2020ம் ஆண்டு இந்தியா நடத்தவுள்ளது. மியாமியில் நடைபெற்ற ஃபிபா கூட்டத்தில் இந்த  முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஃபிபாவின் முடிவெடுக்கும் குழு எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தியாவுகு இந்த வாய்ப்பை வழங்க முடிவு செய்துள்ளது. 

இது இந்திய அணிக்கு கிடைத்துள்ள ஒரு சிறப்பான வாய்ப்பு. 2018 உருகுவேயில் நடந்த 17 வயதுகுட்பட்டோருக்கான பெண்கள் உலகக் கோப்பையில் மெக்ஸிகோவை வீழ்த்தி ஸ்பெயின் பட்டம் வென்றது. நியூசிலாந்து மற்றும் கனடா முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்தது. 

இந்த முடிவை எடுக்க 2017ம் ஆண்டு இந்தியா 17 வயதுகுட்பட்டோருக்கான ஆண்கள் உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியிருந்ததே காரணமானது. 

இந்திய ஆண்கள் அணி க்ரூப் ஆட்டங்களிலேயே தோற்று வெளியேறியது. கொலம்பியாவுடன் ஒரே ஒரு கோல் மட்டுமே மொத்த தொடரிலும் அடித்திருந்தது. 

2017ம் ஆண்டு நடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் கோப்பையை இங்கிலாந்து வென்றது. ஸ்பெயின் ரன்னர் அப் பட்டம் பெற்றது. 

Comments
ஹைலைட்ஸ்
  • இந்திய பெண்கள் அணிக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்
  • 2018 உலகக் கோப்பையில் மெக்ஸிகோவை வீழ்த்தி ஸ்பெயின் பட்டம் வென்றது
  • கொலம்பியாவுடன் ஒரே ஒரு கோல் மட்டுமே இந்தத் தொடரில் எடுத்தது ஆண்கள் அணி
தொடர்புடைய கட்டுரைகள்
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பை: இந்தியா, சிரியா ஆட்டம் ட்ரா
இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பை: இந்தியா, சிரியா ஆட்டம் ட்ரா
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
Advertisement