கொடிஃப் கால்பந்து தொடர்: அர்ஜென்டீனாவை வென்று இந்தியா வரலாற்று சாதனை
பிற மொழிக்கு | READ IN

Updated: 06 August 2018 17:00 IST

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொடிஃப் கால்பந்து தொடரில், 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

India Stun Argentina 2-1 In U-20 COTIF Cup Football Tournament
© AIFF

ஸ்பெயினில் நடைப்பெற்று வரும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொடிஃப் கால்பந்து தொடரில், 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்து உலக கோப்பையை, ஆறு முறை கைப்பற்றியுள்ள அர்ஜீண்டீனா அணியும், இந்திய அணியும் மோதின. போட்டி தொடங்கிய 4வது நிமிடத்தில் இந்தியாவின் தீபக் டாங்ரி முதல் கோல் அடித்தார். இதன் மூலம், போட்டியின் முதல் பாதி முடியும் போது, 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.

இரு அணிகளும் தீவிரமாக விளையாடி வந்த நிலையில், போட்டியின் 68வது நிமிடத்தில் இந்தியாவின் அன்வர் அலி 2வது கோல் அடித்தார். 2-0 என்று முன்னிலை பெற்று வந்தது இந்திய அணி. பரப்பரப்பான இந்த ஆட்டத்தில், போட்டியின் 72வது நிமிடத்தில் அர்ஜெண்டீனா அணி முதல் அடித்தது. எனினும், போட்டி நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது

வரலாற்று சாதனை வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணி, பிளாய்டு பிண்டோவின் பயிற்சியில் விளையாடி வருகிறது. “இந்த வெற்றியின் மூலம் கால்பந்து விளையாட்டில் இந்திய அணியின் பெயர் உலகெங்கும் பரவும். நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று பயிற்சியாளர் பிண்டோ தெரிவித்துள்ளார். பலம் வாய்ந்து அர்ஜெண்டீனா அணியை வீழ்த்தியது, இந்திய கால்பந்து அணியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு பயிற்சியாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது போன்று, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான வாஃப் கால்பந்து தொடரில், 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஈராக் அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கொடிஃப் கால்பந்து தொடர்: அர்ஜென்டீனாவை வென்று இந்தியா வரலாற்று சாதனை
கொடிஃப் கால்பந்து தொடர்: அர்ஜென்டீனாவை வென்று இந்தியா வரலாற்று சாதனை
கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா: சுனில் சேத்ரி அபாரம்!
கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா: சுனில் சேத்ரி அபாரம்!
இன்டர்கான்டிநென்டல் இடையேயான கால்பந்து கோப்பை: வீழ்ந்தது இந்தியா
இன்டர்கான்டிநென்டல் இடையேயான கால்பந்து கோப்பை: வீழ்ந்தது இந்தியா
இன்டர்கான்டிநென்டல் கோப்பை: கென்யாவை வீழ்த்திய இந்தியா!
இன்டர்கான்டிநென்டல் கோப்பை: கென்யாவை வீழ்த்திய இந்தியா!
இன்டர்கான்டிநென்டல் கோப்பை:முதல் போட்டியில் தைப்பே அணியை பந்தாடிய இந்தியா
இன்டர்கான்டிநென்டல் கோப்பை:முதல் போட்டியில் தைப்பே அணியை பந்தாடிய இந்தியா
Advertisement