"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை

Updated: 05 September 2019 11:42 IST

கவுகாத்தியில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை தகுதி சுற்றில் இந்தியா ஓமனுக்கு சிறப்பாக ஆடும் என இந்திய கால்பந்து அணியின் கோல் கீப்பர் குர்ப்ரீத்சிங் சந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Gurpreet Sandhu Asks India To Play "Fearless" Football Against Oman In World Cup Qualifiers
ஆகஸ்ட் 20 கோவா பயிற்சி முகாமுக்கு முன்பு 5 சர்வதேச போட்டிகளில் ஆடியது இந்திய கால்பந்து அணி. © Instagram

கவுகாத்தியில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை தகுதி சுற்றில் இந்தியா ஓமனுக்கு சிறப்பாக ஆடும் என இந்திய கால்பந்து அணியின் கோல் கீப்பர் குர்ப்ரீத்சிங் சந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். "பயமில்லாமல் ஆடுனாலே போதும் எளிதாக வெல்லாலம்" என்றார். கத்தாரில் 2022ல் நடக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை தகுதி சுற்றுப்போட்டிகள் துவங்கவுள்ளன. இந்தியா இதற்கு முன் ஓமனிடம் ஆடி வென்றதே இல்லை.

மேலும் சந்து பேசுகையில் "நாங்கள் வெற்றிக்காக ஆடுகிறோம். எங்கள் வலிமை முழுவதையும் எதிரணிக்கு எதிராக பயன்படுத்தி அதிக புள்ளிகளை பெறுவோம்" என்றார்.

அணியாக ஒன்றாக ஆடி நல்ல துவக்கத்தை கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.

கடைசியாக இரு அணிகளும் 2018ல் அபுதாபியில் மோதிய  ஆட்டம் கோலின்றி ட்ரா ஆனது.

சொந்த மண்ணில் ஓமனுக்கு எதிராக சிறப்பாக ஆட வேண்டும் என்றார் சந்து.

ஆகஸ்ட் 20 கோவா பயிற்சி முகாமுக்கு முன்பு 5 சர்வதேச போட்டிகளில் ஆடியது இந்திய கால்பந்து அணி.
செப்டம்பர் 20ல் கத்தாருடனும், பின்னர் ஆஃப்கான், பங்களாதேஷுடனும் ஆடுகிறது இந்தியா.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
சுனில் சேத்ரியின் சாதனை போட்டியில் வெற்றி பெறுமா இந்தியா?
சுனில் சேத்ரியின் சாதனை போட்டியில் வெற்றி பெறுமா இந்தியா?
Advertisement