'வாவ்' பிரேசில்.... 'பரிதாப' மெஸ்சி...- கோபா அமெரிக்கா அப்டேட்...!

Updated: 03 July 2019 12:25 IST

பிரேசில் அணி, இறுதிபோட்டியில் சிலி அல்லது பெரு அணியை சந்திக்கும்.

Gabriel Jesus, Roberto Firmino Send Brazil Into Copa America Final As Lionel Messi Fails Again
கோபா அமெரிக்கா தொடரின் அரையிறுதியில் பிரேசில் - அர்ஜெண்டினா அணிகள் மோதி கொண்டனர். © AFP

பிலே, ரொனால்டினோ, மரடோனா, மெஸ்சி முதலிய கால்பந்து ஜாம்பவான்களை உலகிற்கு தந்தது பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா. இவ்விறு அணிகளும் மோதி கொண்டால் அது கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். இந்நிலையில் கோபா அமெரிக்கா தொடரின் அரையிறுதியில் பிரேசில் - அர்ஜெண்டினா அணிகள் மோதி கொண்டனர்.

2007 ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா போட்டிக்கு பின் பெரிய போட்டி ஒன்றில் பிரேசில் – அர்ஜெண்டினா அணிகள் மோதி கொள்வது இதுவே முதல் முறையாகும்.

சச்சின், லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்தில்லை, தோனி வெளிநாட்டில் சதமடிததில்லை போன்ற விமர்சனங்கள் வந்த வண்ணம் உண்டு. அது போல் மெஸ்சி மீது வைக்கப்படும் விமர்சனத்தில் முதன்மையானது, அவர் தேசிய அணியான அர்ஜெண்டினாவிற்கு எந்த கோப்பையையும் வென்று தந்ததில்லை என்று.

உலகக்கோப்பை, கோபா அமெரிக்கா போன்ற தொடர்களில் அர்ஜெண்டினாவை இறுதி போட்டி வரை எடுத்து சென்றாலும் கூட, கோப்பையை வெல்ல தவறியுள்ளார் மெஸ்சி. இந்த விமர்சனங்களுக்கு இந்த ஆண்டு மெஸ்சி முடிவு கட்டுவார் என எண்ணப்பட்டது.

ஆனால், பிரேசில் அணி 2-0 என அர்ஜெண்டினாவை வீழ்த்தி கோபா அமெரிக்காவின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பிரேசில் அணிக்காக கேப்ரியல் ஜீசஸ், ராபர்ட்டோ பிர்மினோ ஆகியோர் கோல் அடித்தனர்.

அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்சி, செர்கியோ அக்ரியோ அடித்த ஷாட்கள் கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியது. இறுதியில் அர்ஜெண்டினா மற்றும் மெஸ்சிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த வெற்றியின் மூலம் கோபா அமெரிக்கா தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற பிரேசில் அணி, இறுதிபோட்டியில் சிலி அல்லது பெரு அணியை சந்திக்கும்.

தேசிய அணிக்காக கோப்பையை வெல்ல இன்னும் ஓர் ஆண்டு அர்ஜெண்டினாவின் மெஸ்சி பொருத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • பிரேசில் அணி 2-0 என அர்ஜெண்டினாவை வீழ்த்தியது
  • பிரேசில் அணிக்காக கேப்ரியல் ஜீசஸ், ராபர்ட்டோ பிர்மினோ கோல் அடித்தனர்
  • கோபா அமெரிக்காவின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது பிரேசில்
தொடர்புடைய கட்டுரைகள்
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
'குட் பாய்' மெஸ்சிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை - காரணம் என்ன?
பார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா?
பார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா?
'வாவ்' பிரேசில்.... 'பரிதாப' மெஸ்சி...- கோபா அமெரிக்கா அப்டேட்...!
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி
Advertisement