'குட் பாய்' மெஸ்சிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை - காரணம் என்ன?

Updated: 25 July 2019 13:22 IST

போட்டியில் ரெபரியின் தவறை விமர்சித்த மெஸ்சிக்கு ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டது கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lionel Messi Given One-Match Ban For Copa America Red Card
மெஸ்சிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது © AFP

கோபா அமெரிக்கா தொடரில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் அர்ஜெண்டினா அணியை எதிர்கொண்டது சிலி. இதில் சர்ச்சைகுரிய முறையில் மெஸ்சிக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது. இது கால்பந்து உலகில் கடும் விவாதத்தை உண்டாக்கியது.

அந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி 2-1 என வென்றது. மெஸ்சி மீது எந்த தவறும் இல்லை எனவும் சிலி அணியின் கேரி மெடல் தான் மெஸ்சியை தலையால் தாக்க முயற்சித்தார் எனவும் தெரிய வந்தது. ஆனால் ரெப்ரி மெஸ்சிக்கு ரெட் கார்ட் வழங்கினார்.

கோபா அமெரிக்கா நிர்வாகம் மீது கடுமையான அதிருப்தியில் இருந்த மெஸ்சி ‘லஞ்சம் மற்றும் ரெப்ரிகள் கால்பந்தை ரசிகர்கள் ரசிக்க விடாமல் தடுக்கின்றனர்' என கூறினார். இதனால் CONMEBOL நிர்வாகமானது மெஸ்சிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது.

இந்த தடையால் மார்ச் மாதம் நடக்க இருக்கும் 2022 உலகக்கோப்பை தகுதி சுற்றின் முதல் போட்டியில் மெஸ்சி விளையாட மாட்டார். மேலும் அவருக்கு 1,500 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

‘பிரேசில் தான் கோபா அமெரிக்காவை நடத்துகிறது. CONMEBOL யில் பிரேசிலின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. இதனால் பல சர்ச்சைகள் உருவாகிறது' எனவும் மெஸ்சி தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

போட்டியில் ரெபரியின் தவறை விமர்சித்த மெஸ்சிக்கு ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டது கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • கோபா அமெரிக்கா நிர்வாகம் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார் மெஸ்சி
  • அவருக்கு 1,500 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது
  • ரெப்ரி மெஸ்சிக்கு ரெட் கார்ட் வழங்கினார்.
தொடர்புடைய கட்டுரைகள்
Lionel Messi: அர்ஜெண்டினா அணிக்கு கம்-பேக் கொடுக்கும் மெஸ்சி!!
Lionel Messi: அர்ஜெண்டினா அணிக்கு கம்-பேக் கொடுக்கும் மெஸ்சி!!
"ரொனால்டோ vs மெஸ்ஸி: இருவரில் யாரை பிடிக்கும்?" - கோலியின் பளிச் பதில்!
"ரொனால்டோ vs மெஸ்ஸி: இருவரில் யாரை பிடிக்கும்?" - கோலியின் பளிச் பதில்!
Messi: லா லிகா தொடரில் மெஸ்சிக்கு காயம்...!
Messi: லா லிகா தொடரில் மெஸ்சிக்கு காயம்...!
FIFA: ரொனால்டோவை வீழ்த்தி சிறந்த வீரர் விருதினை வென்ற மெஸ்சி
FIFA: ரொனால்டோவை வீழ்த்தி சிறந்த வீரர் விருதினை வென்ற மெஸ்சி
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
Advertisement