பெனால்டி வாய்ப்பை நழுவவிட்ட மெஸ்ஸி, அர்ஜெண்டீனா ஐஸ்லாந்து போட்டி டிரா

Updated: 17 June 2018 11:05 IST

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகளில், அர்ஜெண்டீனா அணி விளையாடிய ஐஸ்லாந்திற்கு எதிரான முதல் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது

FIFA World Cup: Lionel Messi Misses Penalty As Iceland Hold Argentina For Famous Draw
© AFP

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகளில், அர்ஜெண்டீனா அணி விளையாடிய ஐஸ்லாந்திற்கு எதிரான முதல் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

உலக கோப்பை தொடரில் முதல் முறை பங்கேற்கும் ஐஸ்லாந்து அணி 1-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டீனாவுடனான ஆட்டத்தை டிரா செய்தது. பெரிது எதிர்ப்பார்க்கப்பட்ட அர்ஜெண்டீனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி பெனால்டி வாய்ப்பை நழுவவிட்டது ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு முறை கோப்பை வென்றுள்ள அர்ஜெண்டீனா அணியின் செரிகோ அகுயெறோ 19வது நிமிடத்தில் முதல் அடிக்க, அதனை தொடர்ந்து நான்கு நிமிடங்களிலேயே ஐஸ்லாந்தின் ஆல்ப்ரியோ பின்போகசன் கோல் அடித்து சமன் செய்தார்

யூரோ 2016 தொடரில், இங்கிலாந்து அணியை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றிய ஐஸ்லாந்து அணி சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.
330,000 பேர் என குறைந்த மக்கள் தொகை கொண்ட தீவில் இருந்து உலக கோப்பைக்கு முன்னேறியுள்ள முதல் நாடாக ஐஸ்லாந்து உள்ளது.

ஐஸ்லாந்து அணியின் தீவிர தடுப்பாட்டத்தால், அர்ஜெண்டீனா அணியின் கோல் கனவுகள் தடை செய்யப்பட்டன. ஆட்டத்தின் இறுதி நேரங்களில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்புகளையும் மெஸ்ஸி தவறவிட, அர்ஜெண்டீனா ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.

அடுத்த போட்டியாக, ஜூன் 21 ஆம் தேதி, அர்ஜெண்டீனா அணி குரேஷியா அணியை எதிர்க்கொள்கிறது. ஜூன் 22 ஆம் தேதி ஐஸ்லாந்து- நைஜீரியா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைப்பெற உள்ளது.

நேற்று நடைப்பெற்ற மற்ற இரண்டு போட்டிகளில், பிரான்ஸ் - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சு அணி வெற்றிப்பெற்றது. இறுதியாக நடைப்பெற்ற பெரு - டென்மார்க் இடையேயான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி வெற்றி பெற்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • அர்ஜெண்டீனா ஐஸ்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • அர்ஜெண்டீனாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி பெனால்டி வாய்ப்பை நழுவவிட்டார்
  • ஆட்டத்தின் 19 வது நிமிடத்தில் அர்ஜெண்டீனாவின் செரிகோ அகுயெறோ முதல் கோல்
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
Advertisement