மகுடம் சூடிய பிரான்சு அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது

Updated: 15 July 2018 23:22 IST

அடுத்தடுத்த கோல் அடித்த பிரான்சு அணி போட்டியின் முடிவில் 4 கோல்கள் அடித்தது

FIFA World Cup 2018: France Lift Second World Cup After Winning Classic Final 4-2

ரஷ்யாவில் நடைப்பெற்ற ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டியில், பிரான்சு- குரோஷியா அணிகள் மோதின. அதிரடியாக ஆடிய பிரான்சு அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.

போட்டி தொடங்கிய முதலே, இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. முதல் பாதியில் 18வது நிமிடத்தில் குரோஷியா அணியின் மரியோ மன்சுசசிக் சேம்-சைடு கோல் அடித்தார். இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்சு அணி முன்னிலை பெற்றது. போட்டியின் 28வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் கோல் அடிக்க, 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் இடையே சமன் ஆனது.

36வது நிமிடத்தில், வீடியோ உதவி நடுவர் அளித்த பெனால்டி வாய்ப்பு பிரான்சு அணிக்கு கிடைத்தது. ஆண்டோனி கிரெய்ஸ்மான் பெனால்டி கோல் அடித்தார். இதன் மூலம், போட்டியின் முதல் பாதியில் பிரான்சு அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

போட்டியின் இரண்டாம் பாதியில், அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தது பிரான்சு அணி. 59வது நிமிடத்தில் போக்பாவும், 65 வது நிமிடத்தில் மபாப்பே அடித்த கோல்களினால், 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சு அணி அதிரடியாக முன்னிலை பெற்றது.

போட்டி முடிவில், குரோஷியா அணி 2 கோல்கள் மட்டுமே அடித்திருந்தது. இதனால், 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சு அணி வெற்றி பெற்றது. மகுடம் சூடிய பிரான்சு அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 1998 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பிரான்சு அணி, 20 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சு அணி வெற்றி பெற்றது
  • பிரான்சு அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
  • 20 ஆண்டுகளுக்கு பிறகு, மகுடம் சூடியது பிரான்சு அணி
தொடர்புடைய கட்டுரைகள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!

Advertisement