உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!

Updated: 16 July 2018 16:13 IST

2018 ஃபிபா கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பின்னர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஈடுபட்ட ஒரு விஷயம் உலக அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது

FIFA World Cup 2018 Final, France vs Croatia: Vladimir Putin Gets Trolled For Bringing Umbrella During Award Ceremony

2018 ஃபிபா கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பின்னர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஈடுபட்ட ஒரு விஷயம் உலக அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

2018 ஆம் ஆண்டுக்கான ஃபிபா கால்பந்து உலக கோப்பைத் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. ரஷ்யாவில் நடந்த உலக கோப்பைத் தொடரில் இந்த முறை சாம்பியனாக மகுடம் சூடியது பிரான்ஸ் அணி. க்ரோஷியா நாட்டு கால்பந்து அணியை, 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் மாஸாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த இந்தப் போட்டியை அந்நாட்டு அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் கேம்ரன் மேக்ரன் மற்றும் க்ரோஷியா அதிபர் கொலிந்தா ஆகியோர் நேரில் பார்த்து ரசித்தனர். ஆட்டம் முடிந்த பின்னர் மூன்று நாட்டு அதிபர்களும் மைதானத்துக்குச் சென்று வீரர்களை பாராட்டினர். அப்போது ஆடுகளத்தில் அடை மழை பெய்து கொண்டிருந்தது. மேக்ரன் மற்றும் கொலிந்தா எந்த வித அரணும் இல்லாமல் மழையில் நனைந்தபடி வீரர்களைப் பாராட்டினர். ஆனால், புதினுக்கு மட்டும் மழையில் நனைவதிலிருந்து தடுக்க ஒரு பெரிய குடை விரிக்கப்பட்டது. மொத்த மைதானத்திலும் புதினுக்கு மட்டும் இப்படி குடை விரிக்கப்பட்டதை நெட்டிசன்கள் கவனித்துவிட்டனர். அது சம்பந்தமாக வெளியான புகைப்படத்தை எடுத்து, ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அந்த ட்ரோல் ட்வீட்டுகள் உலக அளவில் ட்ரெண்டானது. 
 

பின்னர் பேசிய புதின், ‘உலக கோப்பைத் தொடரை ரஷ்யா நடத்தியது குறித்து பெருமைப்பட வேண்டும். இந்தத் தொடர் ஒவ்வொரு விதத்திலும் வெற்றியடைந்துள்ளது. உலக கோப்பைத் தொடரை எப்படி ஒருங்கிணைத்தோம் என்பது குறித்து நாம் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளலாம். ரஷ்யாவிலும் உலக அளவிலும் கால்பந்தை மூச்சாக எண்ணும் ரசிகர்களுக்காக இப்படிப்பட்ட ஒரு முழுமையான தொடரை நாங்கள் கொடுத்தோம். வெளிநாட்டிலிருந்து ரஷ்யாவுக்கு நேரில் வந்து போட்டியை கண்டுகளித்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி’ என்று பெருமிதத்துடன் கூறினார். 

Comments
ஹைலைட்ஸ்
  • புதினுக்கு மட்டும் மழையிலிருந்து காக்க குடை விரிக்கப்பட்டது
  • இறுதிப் போட்டியில் பிரான்ஸ், க்ரோஷியாவை 4 - 2 என்ற ரீதியில் தோற்கடித்தது
  • வெளிநாட்டிலிருந்து வந்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி, புதின்
தொடர்புடைய கட்டுரைகள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
மகுடம் சூடிய பிரான்சு அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
மகுடம் சூடிய பிரான்சு அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
Advertisement