Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஊதியம் வழங்கப்படாத வீரர்களுக்கு உதவி: ஃபிஃபா முடிவு!

Updated: 12 February 2020 14:13 IST

உலக கால்பந்து குழுவான பிளேயர்ஸ் யூனியன் ஃபிஃப்ரோ மற்றும் ஃபிஃபா ஆகியோரால் ஒப்புக் கொள்ளப்பட்ட 16 மில்லியன் டாலர் (14.6 மில்லியன் யூரோ) நிதி அடுத்த மூன்று ஆண்டுகளில் 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள வருமான ஆதரவை வழங்கவுள்ளது.

FIFA Offers Help To Players With Unpaid Wages
அதிக தேவையுள்ள வீரர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உடனடியாக உதவி வழங்கப்படும் - ஃபிஃபா © AFP

உலகக் கால்பந்து நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை,வீரர்களுக்கு தங்களின் ஊதியத்தை செலுத்த தவறும் கிளப்புகளால் சிரமத்துக்கு ஆளாகும் நபர்களுகாக உதவி திட்டங்களை வெளியிட்டனர். குறிப்பாக கிளப்புகள் மூடப்பட்ட பின்னர் பல கிளப்புகள் வீரர்களுக்கு சரியான ஊதியம் வழங்க தவறியதாக சமீபத்திய அறிக்கையில் வெளிப்படுத்தப்படுகின்றன. உலக கால்பந்து குழுவான பிளேயர்ஸ் யூனியன் ஃபிஃப்ரோ மற்றும் ஃபிஃபா ஆகியோரால் ஒப்புக் கொள்ளப்பட்ட 16 மில்லியன் டாலர் (14.6 மில்லியன் யூரோ) நிதி அடுத்த மூன்று ஆண்டுகளில் 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள வருமான ஆதரவை வழங்கவுள்ளது. மீதமுள்ளவை ஜூலை 2015 மற்றும் ஜூன் 2020 முதல் முன்கூட்டியே பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

"கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 நாடுகளில் 50க்கும் மேற்பட்ட கிளப்புகள் மூடப்பட்டுள்ளன. இது நூற்றுக்கணக்கான கால்பந்து வீரர்களை கஷ்டத்துக்குள் தள்ளியுள்ளது" என்று ஃபிஃப்ரோ தலைவர் பிலிப் பியாட் கூறினார்.

“அதிக தேவையுள்ள வீரர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உடனடியாக உதவி வழங்கப்படும்.”

கடனில் இருக்கும் கிளப்புகள் மாற்று கிளப்புகளை திறந்துள்ளன. அவற்றை சரி செய்ய ஃபிஃபா முடிவு செய்துள்ளது. மேலும், வீரர்களுக்கு அளிக்கப்படாத பணத்தை கொடுப்பதே முதல் பணியாக வைத்துள்ளது.

"இந்த கிளப்புகள் பல நிலுவையில் உள்ள ஊதியங்களைத் தவிர்ப்பதற்காக மூடப்பட்டுள்ளன. உடனடியாக அவை புதிய கிளப்புகள் என்று அழைக்கப்படுகின்றன" என்று பியாட் பிபா அறிக்கையில் தெரிவித்தார்.

"இந்த நேர்மையற்ற நடைமுறைக்கு எதிராக ஃபிஃப்ரோ நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் அதை எதிர்த்துப் போராடியதற்காக ஃபிஃபாவுக்கு நன்றி." என்றார் அவர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஊதியம் வழங்கப்படாத வீரர்களுக்கு உதவி: ஃபிஃபா முடிவு!
ஊதியம் வழங்கப்படாத வீரர்களுக்கு உதவி: ஃபிஃபா முடிவு!
2023 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையை நடத்த ஆஸி., நியூசிலாந்து முடிவு!
2023 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையை நடத்த ஆஸி., நியூசிலாந்து முடிவு!
ஆர்சென் வெங்கர் உலகளாவிய கால்பந்து வளர்ச்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார்!
ஆர்சென் வெங்கர் உலகளாவிய கால்பந்து வளர்ச்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார்!
முடிவுக்கு வந்தது ரஷ்யாவின் பயணம்… அரையிறுதியில் க்ரோஷியா!
முடிவுக்கு வந்தது ரஷ்யாவின் பயணம்… அரையிறுதியில் க்ரோஷியா!
ஃபிபா உலக கோப்பை 2018: காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
ஃபிபா உலக கோப்பை 2018: காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
Advertisement