செல்ஸி அணிக்கு அதிரடித் தடை... பிபா முடிவுக்குக் காரணம் என்ன?

Updated: 22 February 2019 17:56 IST

குறிப்பிட்ட வயதிற்குக் கீழ் உள்ள வீரர்களை செல்ஸி அணி ஒப்பந்தம் செய்ததால் இந்த தடை என பிபா தெரிவித்துள்ளது

FIFA Bans Chelsea For Two Transfer Windows Over Under-Age Signings
முடிவை மேல்முறையீடு செய்ய செல்ஸி அணிக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது © AFP

ப்ரீமியர் லீக் தொடரில் முக்கிய அணியான செல்ஸி, வரும் ஜனவரி 2020 வரை வேறு அணிகளுக்கு வீரர்களை விற்கவோ வேறு அணிகளிடம் இருந்து வீரர்களை வாங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வயதிற்குக் கீழ் உள்ள வீரர்களை செல்ஸி அணி ஒப்பந்தம் செய்ததால் இந்தத் தடை என பிபா தெரிவித்துள்ளது. அது போக 6,00,000 டாலர் அபராதமும் செல்ஸி அணிக்கு விதிக்கப்பட்டுள்ளது.

‘செல்ஸி அணி தேசிய மற்றும் சர்வதேச அளவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, வீரர்களை மாற்றும் ஏலத்தில் பங்கேற்கத் தடை செய்யப்பட்டுள்ளது' என பிபா அறிக்கை வெளியிட்டது.

இந்த முடிவை மேல்முறையீடு செய்ய செல்ஸி அணிக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு 18 வயதான ப்ரெட்டண்ட் டிராக்காலோ செல்ஸி அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஒப்பந்தம் செய்யும் போது, கால்பந்து சங்கத்தில் டிராக்காலோ உறுப்பினராக இல்லை.

இதனாலே அடுத்த இரண்டு வீரர்கள் மாற்றும் சாளரத்தில் செல்ஸி பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • 2013 ஆம் ஆண்டு வீரர் ஒருவரை செய்த ஒப்பந்தில் முறைகேடு நடந்துள்ளது
  • செல்ஸிக்கு 6,00,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
  • மேலும் இரண்டு வீரர்கள் மாற்ற சாளரத்தில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பையை வெல்ல கோலிக்கு செல்ஸே வீரரின் வாழ்த்து!
உலகக் கோப்பையை வெல்ல கோலிக்கு செல்ஸே வீரரின் வாழ்த்து!
செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!
செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!
"எடன் ஹசார்டை ஏன் நீக்கினேன்" விளக்கும் செல்ஸே பயிற்சியாளர்
"எடன் ஹசார்டை ஏன் நீக்கினேன்" விளக்கும் செல்ஸே பயிற்சியாளர்
சாம்பியன் ஆகுமா லீவர்பூல்? பிரீமியல் லீக் அப்டேட்
சாம்பியன் ஆகுமா லீவர்பூல்? பிரீமியல் லீக் அப்டேட்
ப்ரீமியர் லீக்கின் மிகச்சிறந்த கோலை அடித்த எடன் ஹசார்டு
ப்ரீமியர் லீக்கின் மிகச்சிறந்த கோலை அடித்த எடன் ஹசார்டு
Advertisement