புற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் கால்பந்து பயிற்சியாளரின் மகள்!

Updated: 30 August 2019 16:49 IST

லூயிஸ் என்ரிக், "கடந்த மார்ச் முதல் எனது கடமைகளை இயல்பாக நிறைவேற்றுவதைத் தடுத்த காரணங்களால் விலகுகிறேன்" என்று அவர் அப்போது காரணமாக சொன்னார்.

Luis Enrique
லூயிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இத்தனை மாதங்கள் கிடைத்த ஆதரவு செய்திகளுக்கு நன்றி" என்று கூறினார். © AFP

ஸ்பெயின் முன்னாள் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக், தன்னுடைய 9 வயது மகள் எலும்பு கேன்சரால் இறந்ததாக அறிவித்துள்ளார்." எங்கள் 9 வயது மகள் ஸனா உயிரிழந்தார். எலும்பு புற்றுநோயால் 5 மாதங்கள் போராட்டத்துக்கு பிறகு அவர் இறந்தார்," என்று லூயிஸ் ட்விட் செய்தார். "உன்னை மிகவும் மிஸ் செய்வோம் ஆனால், எங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் உன்னை நினைவில் கொள்வோம்," என்றார். ஜூன் மாதம் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் லூயிஸ் என்ரிக், "கடந்த மார்ச் முதல் எனது கடமைகளை இயல்பாக நிறைவேற்றுவதைத் தடுத்த காரணங்களால் விலகுகிறேன்" என்று அவர் அப்போது காரணமாக சொன்னார். அவருடைய தனிப்பட்ட விஷயம் எப்போதும் பொதுவெளிக்கு வந்ததில்லை, இதுவரை.

உதவி பயிற்சியாளர் ராபர்ட் மோரேனோ ஸ்பெயினின் கடைசி மூன்று போட்டிகளுக்குப் பொறுப்பேற்றுள்ளார், இப்போது யூரோ 2020 தகுதி மற்றும் இறுதிப் போட்டியின் மூலம் அணியை வழிநடத்துவார், தொழில்முறை பயிற்சியாளராக தனது முதல் வேலை இதுதான்.

லூயிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இத்தனை மாதங்கள் கிடைத்த ஆதரவு செய்திகளுக்கு நன்றி" என்று கூறினார்.

கால்பந்து விளையாட்டு வீரர்கள் சிலர் என்ரிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மெசேஜ்கள் அனுப்பியுள்ளனர். ஸ்பெயின் முன்னாள் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் முழு ஆதரவும், அன்பும் உள்ளது. வார்த்தைகள் எதுவும் இல்லை ஆனால், நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்." என்றார்.

"ஸனா இறந்த துக்கமாக செய்தியை கேள்விப்பட்டேன். எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது, குடும்பத்தினரின் வலியை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை, " டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் கூறியுள்ளார்.

"லூயிஸ் என்ரிக்ற்கும் குடும்பத்தாருக்கும் தூரத்திலிருந்து என்னுடைய மிக பெரிய ஹக். இந்த கஷ்டமான சூழலில் தைரியமும் நம்பிக்கையும் தேவை." என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
புற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் கால்பந்து பயிற்சியாளரின் மகள்!
புற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் கால்பந்து பயிற்சியாளரின் மகள்!
ஃபிஃபா 2018: பெனால்டி கோல்களில் ஸ்பெயினை வீழ்த்தியது ரஷ்யா
ஃபிஃபா 2018: பெனால்டி கோல்களில் ஸ்பெயினை வீழ்த்தியது ரஷ்யா
ஃபிபா உலக கோப்பை 2018: போர்ச்சுகலின் வெற்றியைப் பறித்த ஈரான்!
ஃபிபா உலக கோப்பை 2018: போர்ச்சுகலின் வெற்றியைப் பறித்த ஈரான்!
ஃபிபா உலக கோப்பை 2018: ‘லக்கி கோல்’ அடித்த ஸ்பெயின்… போராடி தோற்ற ஈரான்!
ஃபிபா உலக கோப்பை 2018: ‘லக்கி கோல்’ அடித்த ஸ்பெயின்… போராடி தோற்ற ஈரான்!
உலகக் கோப்பை 2-ம் நாள்: ஆட்டத்தை மாற்றிய ரொனால்டோவின் அந்த கோல்
உலகக் கோப்பை 2-ம் நாள்: ஆட்டத்தை மாற்றிய ரொனால்டோவின் அந்த கோல்
Advertisement