"என் அணி, என் வீரர்கள்" - கத்தாருடனான ட்ரா குறித்து சுனில் சேத்ரி!

Updated: 12 September 2019 08:41 IST

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கத்தாருக்கு எதிரான போட்டியை ட்ரா செய்தது பெருமையாக உள்ளது என ட்விட் செய்துள்ளார்.

Sunil Chhetri Lauds India After Goal-Less Draw Against Qatar In World Cup Qualifiers
இந்தியா, அடுத்த போட்டியில் பங்களாதேஷுடன் மோதவுள்ளது. © Twitter

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கத்தாருக்கு எதிரான போட்டியை ட்ரா செய்தது பெருமையாக உள்ளது என ட்விட் செய்துள்ளார். ஃபிபா உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் கோல் இல்லாமல் 0-0 என கத்தாருடனான ஆட்டத்தை ட்ரா செய்தது இந்தியா. காய்ச்சல் காரணமாக அணியில் சேத்ரி இடம்பெறவில்லை. அவர் தனது மகிழ்ச்சியை ட்விட்டர் மூலம் தெரியபடுத்தியுள்ளார்.

அந்த பதிவில் ''டியர் இந்தியா, இது என் அணி, அவர்கள் என் பாய்ஸ், எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளேன் என்பதை விவரிக்க முடியாது. இது புள்ளிப்பட்டியலை பொறுத்தமட்டில் பெரிய வெற்றி அல்ல. ஆனால் இந்தியா திறமையாக போராடியிருக்கிறது. இதற்கு பயிர்சியாளர்களுக்கும், அணிய்9ன் ட்ரெஸ்சிங் ரூமுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய கோல்கீப்பர் குர்ப்ரீத் சிங் சந்து கோல் அளிக்காமல் கத்தாருடன் சிறப்பாக ஆடினார். .ஆசிய கேம்ஸ் சாம்பியனான கத்தாரை சமாளித்தது பெருமை அளிப்பதாக சேத்ரி கூறினார்.

சந்துவும் இந்த போட்டியில் ட்ரா செய்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

இது தகுதிச்சுற்றில் மிகவும் உதவிகரமாக இருக்கும். 4 புள்ளிகளுடன் கத்தார் முதலிடத்திலும், ஒரு புள்ளியுடன் இந்தியா நான்காம் இடத்திலும் உள்ளது.

இந்தியா, அடுத்த போட்டியில் பங்களாதேஷுடன் மோதவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானின் ஜே-லீக் ஒத்திவைக்கப்பட்டது!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானின் ஜே-லீக் ஒத்திவைக்கப்பட்டது!
கொரோனா வைரல் பாதிப்பால், தென் கொரியா கே-லீக்கை ஒத்திவைத்துள்ளது!
கொரோனா வைரல் பாதிப்பால், தென் கொரியா கே-லீக்கை ஒத்திவைத்துள்ளது!
ஊதியம் வழங்கப்படாத வீரர்களுக்கு உதவி: ஃபிஃபா முடிவு!
ஊதியம் வழங்கப்படாத வீரர்களுக்கு உதவி: ஃபிஃபா முடிவு!
இன்ஸ்டாகிராமில் 200 மில்லயன் ஃபாலோவர்ஸை கொண்ட முதல் நபர் ஆனார் ரொனால்டோ!
இன்ஸ்டாகிராமில் 200 மில்லயன் ஃபாலோவர்ஸை கொண்ட முதல் நபர் ஆனார் ரொனால்டோ!
பப்லோ மாரியின் பாதுகாப்புக்கான கடனில் கையெழுத்திட்டுள்ளது ஆர்சனல்!
பப்லோ மாரியின் பாதுகாப்புக்கான கடனில் கையெழுத்திட்டுள்ளது ஆர்சனல்!
Advertisement