இத்தாலியிலும் நான் தான் ராஜா என நிரூபித்த ரொனால்டோ

Updated: 22 January 2019 13:01 IST

‘இது தொடக்கம் தான். இனி அடுத்தடுத்த கோப்பைகளை வெல்ல போகிறோம்’ என ரொனால்டோ கூறினார்

Cristiano Ronaldo Celebrates Juventus
ஃபுட்பால் ராஜா ரொனால்டோவும், பாக்ஸிங் ராஜா மேவெதரும் © Twitter

கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியின் உள்ளூர் அணியான ஜுவண்டெஸ்காக விளையாடி வருகிறார்.

ஜுவண்டெஸ் அணிக்கும் AC மிலன் அணிக்கும் இடையே நடந்த இத்தாலியன் சூப்பர் கப் போட்டியில், ஜுவண்டெஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை தனக்குரியதாக்கியது.

அந்த ஒரு கோலையும் ரொனால்டோ தான் அடித்தார். இத்தாலியில், ரொனால்டோ வெல்லும் முதல் கோப்பை இது.

கோப்பையை வென்ற பின், வெற்றியை ஃப்லாய்டு மேவெதர் உடன் ஜுவண்டெஸ் அணி வீரர்கள் கொண்டாடினர். பாக்ஸிங் உலகின் ராஜாதி ராஜா மேவெதர் ஆவார்.

 

 

‘ஜுவண்டெஸ் அணியுடன் எனது முதல் கோப்பையை வென்று விட்டேன்' என ரொனால்டோ தெரிவித்திருந்தார்.

‘இது தொடக்கம் தான். இனி அடுத்தடுத்த கோப்பைகளை வெல்ல போகிறோம்' என ரொனால்டோ கூறினார்.

ரொனால்டோ வெல்லும் 28 வது கோப்பை இது.

கால்பந்து உலகின் ராஜாவான ரொனால்டோவும் பாக்ஸிங் உலகின் ராஜாவான மேவெதரும் ஒரே புகைப்படத்தில் வெற்றியை கொண்டாடும் காட்சி, அவர்களின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஜுவெண்டஸ் அணி வெல்லும் எட்டாவது சூப்பர் கப் இதுவாகும். AC மிலன் அணி இதுவரை ஏழு முறை சூப்பர் கப்பை வென்றுள்ளது.

(With AFP inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • ரொனால்டோ ஒரு கோல் அடித்தார்
  • ரியல் மாட்ரிட் அணியிடம் இருந்து ரொனால்டோ ஜுவெண்டஸ் அணிக்கு மாறினார்
  • கடைசி 20 நிமிடங்களில் 10 வீரர்களுடன் AC மிலன் அணி விளையாடியது
தொடர்புடைய கட்டுரைகள்
"உனக்கென்ன பைத்தியமா?" ரசிகர் மீது கோபமடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
"உனக்கென்ன பைத்தியமா?" ரசிகர் மீது கோபமடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
போட்டி முடியும் முன் வெளியேறிய ரொனால்டோ... காரணம் என்ன?
போட்டி முடியும் முன் வெளியேறிய ரொனால்டோ... காரணம் என்ன?
சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் கோபத்திற்கு காரணம் என்ன?
சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் கோபத்திற்கு காரணம் என்ன?
Champions League: ஜுவெண்டஸ், பிஎஸ்ஜி அணிகள் முன்னேற்றம் !!
Champions League: ஜுவெண்டஸ், பிஎஸ்ஜி அணிகள் முன்னேற்றம் !!
"நான் விருது வாங்குவதை அவர் பார்த்ததில்லை" - தந்தை குறித்து ரொனால்டோ
"நான் விருது வாங்குவதை அவர் பார்த்ததில்லை" - தந்தை குறித்து ரொனால்டோ
Advertisement