செல்சியின் கம்-பேக், பார்சிலோனாவின் டிரா - சாம்பியன்ஸ் லீக் அப்டேட்

Updated: 06 November 2019 11:13 IST

சிலாவியா பிரெக் அணியுடான போட்டியில் 0-0 என டிரா செய்தது பார்சிலோனா அணி. இரண்டாம் இடத்தில் டார்ட்மண்ட் அணி உள்ளது.

Champions League: Chelsea Pull Off Sensational Comeback As Liverpool Win, Barcelona Stumble
செல்சி அணிக்கு செசர் அற்புதமான கோல் அடித்து அசத்தினார் © AFP

4-1 என பின்தங்கிய நிலையில் இருந்து 4-4 என டிரா செய்து அசத்தியது செல்சி. அஜக்ஸ் அணிக்கு எதிராக நடந்த இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இரண்டாம் பாதியில் 10 நிமிடங்கள் கடந்த பின் அஜக்ஸ் அணி அடித்த கோல் மூலம் 4-1 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது செல்சி அணி.

அஜக்ஸ் அணியின் டாலி பிளைண்ட், ஜொயல் வெல்ட்மான் ஆகியோர் வெளியேற்றப்பட 9 வீரர்களுடன் விளையாடியது அஜக்ஸ். அந்நேரத்தில் தான் வழங்கப்பட்ட இரண்டு பெனால்டி வாய்ப்புகளையும் கோலாக மாற்றி அசத்தியது செல்சி.

‘இந்த போட்டியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இங்கு அனைவரும் ஓர் சிறந்த கால்பந்து ஆட்டத்தை காண தான் வந்துள்ளனர். அதனை இந்த போட்டி வழங்கியிருக்கும் என நம்புகிறேன்' என்றார் செல்சி பயிற்சியாளர் பிராங்க் லாம்பார்ட்.

இதன் மூலம் அஜக்ஸ், செல்சி, வாலன்சியா அணிகள் 7 புள்ளிகளுடன் ஹெச் பிரிவில் முதலிடத்தில் உள்ளனர்.

அதே நேரம் வெற்றியை பதிவு செய்த லீவர்பூல் அணியானது இ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. 1-1 என டிரா செய்த நபோலி அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

எப் பிரிவில் பார்சிலோனா அணி முதலிடத்தில் உள்ளது. சிலாவியா பிரெக் அணியுடான போட்டியில் 0-0 என டிரா செய்தது பார்சிலோனா அணி. இரண்டாம் இடத்தில் டார்ட்மண்ட் அணி உள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • அஜக்ஸ், செல்சி, வாலன்சியா அணிகள் 7 புள்ளிகள் பெற்றுள்ளது
  • லீவர்பூல் அணியானது இ பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
  • எப் பிரிவில் பார்சிலோனா அணி முதலிடத்தில் உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
செல்சியின் கம்-பேக், பார்சிலோனாவின் டிரா - சாம்பியன்ஸ் லீக் அப்டேட்
செல்சியின் கம்-பேக், பார்சிலோனாவின் டிரா - சாம்பியன்ஸ் லீக் அப்டேட்
பர்ன்லே vs செல்ஸியா பிரீமியர் லீக்: எங்கு, எப்போது காணலாம்?
பர்ன்லே vs செல்ஸியா பிரீமியர் லீக்: எங்கு, எப்போது காணலாம்?
செல்சி அணியின் தலைமை பயிற்சியாளர் இவரா? - சந்தோஷத்தில் ரசிகர்கள்...!
செல்சி அணியின் தலைமை பயிற்சியாளர் இவரா? - சந்தோஷத்தில் ரசிகர்கள்...!
உலகக் கோப்பையை வெல்ல கோலிக்கு செல்ஸே வீரரின் வாழ்த்து!
உலகக் கோப்பையை வெல்ல கோலிக்கு செல்ஸே வீரரின் வாழ்த்து!
செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!
செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!
Advertisement