பாலியல் புகாரில் நெய்மருக்கு தொடர்பில்லை - அட்டர்னி ஜெனரல்!

Updated: 31 July 2019 13:33 IST

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் மீதான பாலியல் புகாருக்கு போதிய ஆதாரம் இல்லாததால் சாவ் பாலோ அட்டனி ஜெனரல் அந்த புகாரை நிராகரித்தார். 15 நாட்களுக்குள் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Brazil Police End Neymar Rape Probe Over Lack Of Evidence
பாரிஸ் ஹோட்டலில் பிரேசில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறிய புகாரை ஆரம்பத்திலேயே நெய்மர் மறுத்தார். © AFP

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் மீதான பாலியல் புகாருக்கு போதிய ஆதாரம் இல்லாததால் சாவ் பாலோ அட்டனி ஜெனரல் அந்த புகாரை நிராகரித்தார். 15 நாட்களுக்குள் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அதில் கூறப்பட்டுள்ளது. நெய்மரின் செய்தி தொடர்பாளர் நீதிபதி கருத்தில் கருத்து கூறமுடியாது என்றார்.

பாரிஸ் ஹோட்டலில் பிரேசில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறிய புகாரை ஆரம்பத்திலேயே நெய்மர் மறுத்தார்.

ஒரு வார காலமாக பரபரப்பான மற்றும் சர்ச்சையான செய்தியாக இது வலம் வந்தது. இது பிரேசிலின் கோபா அமெரிக்காவுக்கு எதிரான போட்டி வரை எதிரொலித்தது.

தென் அமெரிக்காவுக்கு பயணம் பேற்கொண்டுள்ள பிரெசில் அணி காயம் காரணமாக ஏற்கெனவே நெய்மரை இழந்திருந்தது. 

இந்த புகார் ஜூன் 2ம் தேதி பதிவானது அதற்கு 7 நிமிட வீடியோ மூலம் இன்ஸ்டாகிராமில் பதில் தந்தார் நெய்மர்.

அதில் புகார் தந்த ட்ரினிடாடெ அனுப்பிய  வாட்ஸப் செய்திகள் மற்றும் புகைப்படங்களை காட்டினார்.

அதனை விசாரித்த போலீஸ் இது நாடகம் என்பதை உறுதி செய்தது. நெய்மர் மீதான பாலியல் புகார் போலி என உறுதி செய்யப்பட்டது. இது கத்தாருடனான போட்டிக்கு முன்பு கூறப்பட்ட புகார் என்பது தெரியவந்தது.

இந்த போட்டியில் 20 நிமிடத்தில் காயமடைந்து போட்டியை விட்டு வெளியேறினார் நெய்மர்.

போலீஸ் வாட்ஸப் செய்திகள் குறித்த விசாரணையை தொடர்ந்தது. மாறி மாறி குற்றம் சாட்டியதில் நெய்மர் நிரபராதி என நிரூபிக்கபட்டார்.

2017ல் பி.எஸ்.ஜி அணியில் இணைந்த நெய்மர் இன்னும் அந்த அணியின் ஆரம்ப போட்டிகளில் பங்கேற்கவில்லை.சிட்னியில் சீனாவுக்கு எதிரான போட்டியிலும் ஆடமாட்டார் என்று கூறப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பணம் பறிக்கும் நோக்கில் நெய்மர் மீது புகார் தந்த மாடல் மீது வழக்கு!
பணம் பறிக்கும் நோக்கில் நெய்மர் மீது புகார் தந்த மாடல் மீது வழக்கு!
பாலியல் புகாரில் நெய்மருக்கு தொடர்பில்லை - அட்டர்னி ஜெனரல்!
பாலியல் புகாரில் நெய்மருக்கு தொடர்பில்லை - அட்டர்னி ஜெனரல்!
பார்சிலோனாவிற்கு கம்-பேக் கொடுக்கிறாரா நெய்மர்?
பார்சிலோனாவிற்கு 'கம்-பேக்' கொடுக்கிறாரா நெய்மர்?
இணையத்தில் வைரலான நெய்மரின் 27வது பிறந்தநாள்!
இணையத்தில் வைரலான நெய்மரின் 27வது பிறந்தநாள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
Advertisement