பார்சிலோனா அணியின் புதிய வீரர் யார் தெரியுமா?

Updated: 25 January 2019 16:05 IST

ஜாங்கை ஒப்பந்தம் செய்ய பிஎஸ்ஜி, மான்செஸ்டர் சிட்டி மற்றும் பார்சிலோனா இடையே மும்முனை போட்டி நடந்தது. அதில் பார்சிலோனா வென்றது.

Barcelona Sign Frenkie De Jong From Ajax For 75 Million Euros
ஜாங், யூரோப்பியாவில் சிறந்த வீரர்களில் ஒருவர் © Twitter

அஜக்ஸ் கால்பந்து அணியின் வீரர் ஃபிரென்கி டி ஜாங் பார்சிலோனா அணிக்காக விளையாட உள்ளார். 21 வயதான ஜாங், 5 ஆண்டுகள் பார்சிலோனாவிற்காக விளையாட 75 மில்லியன் யூரோவிற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பார்சிலோனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜாங் பார்சிலோனாவிற்காக ஜூலை 1,2019 முதல் விளையாடவுள்ளார்' என பார்சிலோனா அணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஜாங்கை ஒப்பந்தம் செய்ய பிஎஸ்ஜி, மான்செஸ்டர் சிட்டி மற்றும் பார்சிலோனா இடையே மும்முனை போட்டி நடந்தது. அதில் பார்சிலோனா வென்றது.

நெதர்லாந்தை சேர்ந்த ஜாங், 2015 –ம் ஆண்டு அஜக்ஸ் அணிக்காக விளையாட தொடங்கினார். பார்சிலோனாவிற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளதால், பார்சிலோனா அணி மேலும் வலுப்பெற்றுள்ளது.

75 மில்லியன் யூரோ போக, மேலும் 11 மில்லியன் அஜக்ஸ் அணிக்கு வழங்கப்படும் என பார்சிலோனா தெரிவித்துள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஜாங், அஜக்ஸ் அணிக்காக 2015 முதல் விளையாடி வருகிறார்
  • பிஎஸ்ஜி, மான்செஸ்டர் சிட்டி மற்றும் பார்சிலோனா இடையே போட்டி நிலவியது
  • அடுத்த மாதம் ரியல் மாட்ரித் அணிக்கு எதிராக அஜக்ஸ் விளையாடவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
Messi: லா லிகா தொடரில் மெஸ்சிக்கு காயம்...!
Messi: லா லிகா தொடரில் மெஸ்சிக்கு காயம்...!
FIFA: ரொனால்டோவை வீழ்த்தி சிறந்த வீரர் விருதினை வென்ற மெஸ்சி
FIFA: ரொனால்டோவை வீழ்த்தி சிறந்த வீரர் விருதினை வென்ற மெஸ்சி
புற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் கால்பந்து பயிற்சியாளரின் மகள்!
புற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் கால்பந்து பயிற்சியாளரின் மகள்!
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
பார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா?
பார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா?
Advertisement