மெஸ்ஸி - செர்சியோ மோதல்...எல் கிளாசிக்கோ அப்டேட்...!!!

Updated: 03 March 2019 14:36 IST

1-0 என கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது

Barcelona Beat Real Madrid To Edge Closer To La Liga Title
பார்சிலோனா 96 எல் கிளாசிகோ போட்டிகளை வென்றுள்ளது. © AFP

லா லிகா கால்பந்து தொடரின் முக்கியமான பார்சிலோனா – ரியல் மாட்ரிட் போட்டி, நேற்று நடந்தது.

எல் கிளாசிக்கோ என அழைக்கப்படும் பார்சிலோனா – ரியல் மாட்ரிட் போட்டி ரியல் மாட்ரிட்டின் ஹோம் க்ரவுண்டான சாண்டியாகோ பெர்னாபியோவில் நடந்தது.

கடந்த புதன்கிழமை நடந்த கோப்பா டெல் ரே தொடரில் பார்சிலோனா – ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. அதில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டத்தில் பார்சிலோனாவின் ஆட்டமே சிறப்பாக இருந்தது. பார்சிலோனாவின் இவான் ராக்கிடிக் அசத்தலான கோல் மூலம் பார்சிலோனாவை 1-0 என கோல் கணக்கில் வெற்றி பெற செய்தார்.

எவ்வளவு முயன்றும் ரியல் மாட்ரிட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் பாதி நேரத்தில் பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி மற்றும் ரியல் மாட்ரிட் அணியின் செர்ஜியோ ராம்பஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

செர்ஜியோ வேண்டும் என மெஸ்ஸியை கையால் அடித்தார் என நடுவரிடம் பார்சிலோனா வீரர்கள் முறையிட்டனர்.

ரியல் மாட்ரிட் அணியின் வீரர்களான பேல், பென்சிமா என பலர் முயற்சித்தும் பார்சிலோனாவின் கோலுக்கு பதில் கோல் அடிக்க முடியவில்லை.

லா லிகா தொடரின் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது பார்சிலோனா. நேற்றைய ஆட்டத்தின் வெற்றி மூலம் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான இடைவேளை 12 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. லா லிகாவை ரியல் மாட்ரிட் வெல்வது மிக கடினமாகும்.

எல் கிளாசிக்கோ போட்டிகளில் இதுவரை பார்சிலோனா அணி 96 முறையும் ரியல் மாட்ரிட் அணி 95 முறையும் வென்றுள்ளன.

 

Comments
ஹைலைட்ஸ்
  • எல் கிளாசிகோ போட்டி நேற்று நடந்தது
  • 96-95 என எல் கிளாசிகோவில் பார்சிலோனா முன்னிலையில் உள்ளது
  • லா லிகா தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது பார்சிலோனா
தொடர்புடைய கட்டுரைகள்
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
பார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா?
பார்சிலோனா அணியுடன் பயிற்சி செய்த புது வீரர் யார் தெரியுமா?
பார்சிலோனாவிற்கு
பார்சிலோனாவிற்கு 'கம்-பேக்' கொடுக்கிறாரா நெய்மர்?
ஊழலுக்கு எதிராக ராப் பாடும் கால்பந்து வீரர் ரொனால்டினோ
ஊழலுக்கு எதிராக ராப் பாடும் கால்பந்து வீரர் ரொனால்டினோ
சாம்பியன்ஸ் லீக் காலிறுதி: யூனைடெடை வீழ்த்திய பார்சிலோனா!
சாம்பியன்ஸ் லீக் காலிறுதி: யூனைடெடை வீழ்த்திய பார்சிலோனா!
Advertisement