அட்லெட்டிகோ அசத்தல்... ஜுவெண்டஸ் சொதப்பல்.... சாம்பியன்ஸ் லீக் அப்டேட்!

Updated: 21 February 2019 14:31 IST

இவ்விறு அணிகளுக்கும் அடுத்த போட்டியின் முடிவைப் பொறுத்தே காலிறுதிப் போட்டிக்கு எந்த அணி முன்னேறும் என்பது தெரியவரும்.

Formidable Atletico Madrid Stun Cristiano Ronaldo And Juventus
ரொனல்டோ தன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை © AFP

இந்த ஆண்டு இத்தாலியின் ஜுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆகி விளையாடி வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சென்ற ஆண்டு ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார் ரொனால்டோ.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஜுவாண்டஸ் – அட்லெட்டிகோ டி மாட்ரிட் அணிகள் மோதின. இதில் ஜுவாண்டஸ் அணி வென்றுவிடும் என்றுதான் பலர் எண்ணினர்.

ஆனால், இதில் ஜுவாண்டஸ் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. தியாகோ கொடின் மற்றும் ஜோஸ் கிம்மினஸ் ஆகியோரின் அசத்தலான கோல்களால் அட்லெட்டிகோ அணி சுலபமாக வென்றது.

கடந்த 23 ஆண்டுகளாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ஜுவாண்டஸ் அணி வென்றதில்லை. இம்முறை ரொனால்டோ இருப்பதால் சாம்பியன் கோப்பையை வெல்ல ஜுவாண்டஸ் அணிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக எண்ணப்படுகிறது.

நேற்றை போட்டியில், ரொனால்டோ தன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாக, கடுப்பில் அந்த ஸ்டேடியத்தில் இருந்த மக்களை நோக்கி தன் ஐந்து விரல்களை காட்டினார்.

ரொனால்டோ இதுவரை வென்றுள்ள ஐந்து சாம்பியன்ஸ் லீக் கோப்பையை குறிக்கும் விதமாக தான் அவர் தனது ஐந்து விரல்களை காட்டியுள்ளார்.

இந்நிலையில், இவ்விறு அணிகளுக்கும் அடுத்த போட்டியின் முடிவைப் பொறுத்தே காலிறுதிப் போட்டிக்கு எந்த அணி முன்னேறும் என்பது தெரியவரும்.

Comments
ஹைலைட்ஸ்
  • அட்லெட்டிகோ 2-0 என கோல் கணக்கில் வென்றது
  • ரொனால்டோ கோல் அடிக்காமல் ஏமாற்றினார்
  • ஜுவெண்டஸ் சாம்பியன்ஸ் லீக் வென்று 23 ஆண்டுகள் ஆகியுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி
வரம்புமீறிய கொண்டாட்டம்; சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
வரம்புமீறிய கொண்டாட்டம்; சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
அட்லெட்டிகோ அசத்தல்... ஜுவெண்டஸ் சொதப்பல்.... சாம்பியன்ஸ் லீக் அப்டேட்!
அட்லெட்டிகோ அசத்தல்... ஜுவெண்டஸ் சொதப்பல்.... சாம்பியன்ஸ் லீக் அப்டேட்!
ரொனால்டோவிற்கு பெரும் அபராதம் விதித்த நீதிமன்றம்; ஏன் தெரியுமா?
ரொனால்டோவிற்கு பெரும் அபராதம் விதித்த நீதிமன்றம்; ஏன் தெரியுமா?
இத்தாலியிலும் நான் தான் ராஜா என நிரூபித்த ரொனால்டோ
இத்தாலியிலும் நான் தான் ராஜா என நிரூபித்த ரொனால்டோ
Advertisement