சுனில் சேத்ரியின் சாதனை போட்டியில் வெற்றி பெறுமா இந்தியா?

Updated: 14 January 2019 14:36 IST

இந்திய கேப்டன் சுனில் சேத்ரி இன்றைய ஆட்டத்தில் ஆடுவதன் மூலம் முன்னாள் கேப்டன் பாய்சிங் பூட்டியாவின் சாதனையை சமன் செய்யவுள்ளார்.

AFC Asian Cup 2019: India Eye Historic Knock-Out Berth In Sunil Chhetri
இன்று நடக்கும் இன்னொரு ஆட்டத்தில் யூஏஇ தாய்லாந்தை வீழ்த்தினால் இந்தியா தகுதி பெறும் என்ற நிலையும் உள்ளது.  © Facebook

2019ம் ஆண்டு ஏஎஃப்சி ஆசியக் கோப்பை போட்டியில் உள்ளூர் அணியான யூஏஇயிடம் தோற்ற பிறகு இந்தியா தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பஹ்ரைனுடனான ஆட்டத்தை இன்று எதிர்கொள்கிறது. ஆசியக் கோப்பை போட்டிகளில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குள் செல்லும் முனைப்பில் உள்ளது இந்தியா. 97வது இடத்தில் இருக்கும் இந்தியா 113வது இடத்தில் இருக்கும் பஹ்ரைனுடன் இன்றைய ஆட்டத்தை ட்ரா செய்தாலே போதும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். 

இந்தியா, 1984 மற்றும் 2011ல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்திய கேப்டன் சுனில் சேத்ரி இன்றைய ஆட்டத்தில் ஆடுவதன் மூலம் முன்னாள் கேப்டன் பாய்சிங் பூட்டியாவின் சாதனையை சமன் செய்யவுள்ளார். 107 போட்டிகளில் ஆடி இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

1964ல் இந்திய அணி ரன்னர் அப் இடத்தை பிடித்தது. அப்போது நான்கு நாடுகளுக்கு இடையே வெற்றி பெற்ற அணி புள்ளிகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்ப்பட்டது. அன்றைய தொடரில் நாக் அவுட் சுற்றுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தத் தொடரில் ட்ரா செய்தாலே இந்தியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். ஒருவேளை இந்தியா இன்று தோற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இன்று நடக்கும் இன்னொரு ஆட்டத்தில் யூஏஇ தாய்லாந்தை வீழ்த்தினால் இந்தியா தகுதி பெறும் என்ற நிலையும் உள்ளது. 

ஒருவேளை இரு அணிகளும் தோற்றால் க்ரூப் பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் என்ன முடிவு என்பது பார்க்கப்படும். இந்தியா, தாய்லாந்தை ஏற்கெனவே 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் பயிற்சியாளராக இருக்கும் இந்திய அணி பஹ்ரைனிடம் தோற்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணி ஏற்கெனவே பஹ்ரைனை ஆசியக் கோப்பை போட்டி 2011ல் 2-5 என்ற கணக்கில் வீழ்த்தியது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பை: இந்தியா, சிரியா ஆட்டம் ட்ரா
இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பை: இந்தியா, சிரியா ஆட்டம் ட்ரா
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
இந்தியா, 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஃபிபா உலகக் கோப்பை நடத்த முடிவு!
இந்தியா, 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஃபிபா உலகக் கோப்பை நடத்த முடிவு!
Advertisement