ஆசியக் கோப்பை 2019: முதல் சுற்றுடன் வெளியேறியது இந்தியா அணி!

Updated: 15 January 2019 10:52 IST

1984, 2011 ஆண்டுகளிலும் ஏஎஃப்சி  ஆசியக் கோப்பை  போட்டியில் முதல் சுற்றுடன் இந்தியா அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது

Asian Cup 2019: Bahrain Score Last-Gasp Penalty To Break Indian Hearts
0-1 என கோல் கணக்கில் இந்தியா தோற்றது © AFP

2019ம்  ஆண்டு  ஏஎஃப்சி  ஆசியக் கோப்பை  போட்டியில் நேற்று நடந்த போட்டியில், இந்தியாவும் பஹ்ரைனும் மோதின.

ஏ பிரிவில் நடந்த இந்தப் போட்டியில், வெற்றி பெற்றால்தான் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்துடன் இந்தியா களம் இறங்கியது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் தாய்லாந்தை 4-1 என்று வென்ற இந்தியா, இரண்டாவது போட்டியில் யுஏஇ அணியிடம் 0-2 என்ர கோல் கணக்கில் தோற்றது.

இந்நிலையில், நேற்றைய போட்டியில், எதிர்ப்பார்க்கபட்ட அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை இந்தியா அணி. 91வது நிமிடத்தில் இந்திய கேப்டனும் கோல் கீப்பருமான ப்ரோனாய் ஹால்டர் செய்த தவறால், எதிரணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

இந்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் பஹ்ரைனின் ஜமால் ரஷித். இதனால் தோல்வி கண்ட இந்தியா அணி, ஏஎஃப்சி  ஆசியக் கோப்பை  போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறியது. ஏ பிரிவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது இந்தியா அணி.

1984, 2011 ஆண்டுகளிலும் ஏஎஃப்சி  ஆசியக் கோப்பை போட்டியில் முதல் சுற்றுடன் இந்தியா அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்த ஏஎஃப்சி  ஆசியக்  கோப்பை  போட்டியில் நல்ல ஃபார்முடன் நுழைந்த இந்தியா அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 

Comments
ஹைலைட்ஸ்
  • முதல் போட்டியில் 4-1 என தாய்லாந்தை வென்றது இந்தியா
  • பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றியது பஹ்ரைன்
  • மூன்று புள்ளிகளுடன் இந்தியாவிற்கு ஏ பிரிவில் கடைசி இடம் தான் கிடைத்தது
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பை: இந்தியா, சிரியா ஆட்டம் ட்ரா
இன்டர்கான்டினன்டல் கால்பந்து கோப்பை: இந்தியா, சிரியா ஆட்டம் ட்ரா
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
இந்தியா, 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஃபிபா உலகக் கோப்பை நடத்த முடிவு!
இந்தியா, 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஃபிபா உலகக் கோப்பை நடத்த முடிவு!
Advertisement