அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அர்சனல்... யூரோ லீக் அப்டேட்!

Updated: 22 February 2019 17:50 IST

செல்ஸி அணி, எப்.ஏ கோப்பை தொடரில் மான்செஸ்டர் யூனைடெட் அணியிடம் தோல்வி அடைந்ததால், செல்ஸி அணியின் மேலாளர் மௌரிசியோ சாரி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

Arsenal, Chelsea Cruise Into Europa League Last 16
3-0 என கணக்கில் பேட் பொரிச்சோவ் அணியை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது செல்ஸி © AFP

ஐரோப்பிய லீக் தொடரின் கடைசி 16 அணிகள் சுற்றுக்கு அர்சனல் மற்றும் செல்ஸி அணிகள் முன்னேறியுள்ளன.

செல்ஸி அணி, எப்.ஏ கோப்பை தொடரில் மான்செஸ்டர் யூனைடெட் அணியிடம் தோல்வி அடைந்ததால், செல்ஸி அணியின் மேலாளர் மௌரிசியோ சாரி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இதையடுத்து, ஐரோப்பிய லீக் தொடரில் 3-0 என கணக்கில் பேட் பொரிச்சோவ் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளதால் சாரி மீதுள்ள விமர்சனங்கள் குறைய துவங்கியுள்ளன.

ஏற்கெனவே முதல் போட்டியில், 2-1 என செல்ஸி முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில், ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் ஆலிவர் கிரவுட் செல்ஸி அணிக்காக முதல் கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து ராஸ் பார்க்லி 74வது நிமிடத்திலும் கல்லம் அட்சன் 84 நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதன் மூலம் 3-0 என கோல் கணக்கில் செல்ஸி வென்றது.

மற்றொரு போட்டியில், அர்சனல் அணியும் பட்டே அணிகளும் மோதின. முதல் போட்டியில் பட்டே 1-0 என கோல் கணக்கில் அர்சனல்லை வென்றது. இதனால் இந்தப் போட்டியில் அதிக கோல் வித்தியாசத்தில் அர்சனல் வென்றால் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் என இக்கட்டான நிலை உருவானது.

ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் பட்டே அணியின் ஜாக்கர் வோல்கவ் சுய கோல் அடித்தார். 39 வது நிமிடத்தில் அர்சனலின் முஷ்தப்பி மற்றும் 60 வது நிமிடத்தில் சொக்ராடிஸ் கோலால் அர்சனல் அணி 3-0 என கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஐரோப்பிய லீக் தொடரின் 16 அணிகள் சுற்றுக்கு அர்சனல், செல்ஸி அணிகளுடன் ரெட் புல், செவிலா, எய்ண்ட்ரஷட், வில்லாரியல், டினமோ சாக்ரப், ஜெனிட், வலேன்சியா, நப்போலி, ச்லேவியா ப்ரஹா, இண்டர் மிலன், க்ரஸ்நோடர், பெண்பிக்கா, ரென்னிஸ், டைனமோ க்யூவ் ஆகிய அணிகளும் முன்னேறின.

Comments
ஹைலைட்ஸ்
  • கடைசி 16 அணிகள் சுற்றுக்கு அர்சினல் மற்றும் செல்ஸி அணிகள் முன்னேறியுள்ளன
  • எப்.ஏ கோப்பை தொடரில் மான்செஸ்டர் யூனைடத் அணியிடம் தோல்வி கண்டது செல்ஸி
  • அர்சனல் அணி 3-0 என கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்புடைய கட்டுரைகள்
செல்சியின் கம்-பேக், பார்சிலோனாவின் டிரா - சாம்பியன்ஸ் லீக் அப்டேட்
செல்சியின் கம்-பேக், பார்சிலோனாவின் டிரா - சாம்பியன்ஸ் லீக் அப்டேட்
பர்ன்லே vs செல்ஸியா பிரீமியர் லீக்: எங்கு, எப்போது காணலாம்?
பர்ன்லே vs செல்ஸியா பிரீமியர் லீக்: எங்கு, எப்போது காணலாம்?
செல்சி அணியின் தலைமை பயிற்சியாளர் இவரா? - சந்தோஷத்தில் ரசிகர்கள்...!
செல்சி அணியின் தலைமை பயிற்சியாளர் இவரா? - சந்தோஷத்தில் ரசிகர்கள்...!
உலகக் கோப்பையை வெல்ல கோலிக்கு செல்ஸே வீரரின் வாழ்த்து!
உலகக் கோப்பையை வெல்ல கோலிக்கு செல்ஸே வீரரின் வாழ்த்து!
செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!
செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!
Advertisement