ஆசியக் கோப்பை கால்பந்து: யூஏஇயிடம் வீழ்ந்தது இந்தியா!

Updated: 11 January 2019 17:37 IST

துபாய் சையது ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின

AFC Asian Cup 2019: UAE Blank India To Take Pole Spot In Group A
© AFP

துபாய் சையது ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்தியா சரியாக வாய்ப்புகளை பயன்படுத்தி கோல் அடிக்காததால் 0-2 என்ற கணக்கில் யூ ஏ இயிடம் தோற்றது. இந்த தோல்வி மூலம் க்ரூப் ஏ பிரிவில் முதலிடத்திலிருந்து இந்தியா இரண்டாவது இடத்துக்கு இறங்கியது. நான்கு புள்ளிகளிலிருந்து மூன்று புள்ளிகளாகவும் சரிந்துள்ளது. யூஏஇயின் கல்ஃபான் முபாரக் 41 வது நிமிடத்திலும், அலி அகமது மகபூட் 88வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

இதற்கு முன்பு யூஏஇ இந்தியாவை 1984ம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பை போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது.

முதல் பாதியில் இந்தியாவுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தாலும், அதனை சரிவர கோலாக மாற்ற முடியவில்லை. அதேபோல இந்தியாவும் யூஏஇயின் வாய்ப்புகளை தடுத்தது. குறிப்பாக ஆஷிக் குருனியின் ஆட்டம் அபாரமாக இருந்தது.

யூஏஇ இந்தியாவின் தாக்குதலை சமாளித்து ஆடியது. 41வது நிமிடத்தில் மகபூத் தந்த பாஸை கோலாக்கினார் முபாரக். முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் யூஏஇ அபாரமாக ஆடியது.

1-0 என்ற முன்னிலையோடு ஆடத்துவங்கிய யூஏஇ இந்தியாவை கோல் அடிக்கவிடாமல் தடுத்தது. இந்தியாவின் சுனில் சேத்ரி மற்றும் ஜிஜே ஆகியோர் ஃப்ரீ கிக்கை மிஸ் செய்தனர்.

88வது நிமிடத்தில் மகபூத் கோல் அடிக்க 2-0 என்ற கணக்கில் யூஏஇ இந்தியாவை வீழ்த்தியது. இதனால், புள்ளிப்பட்டியலில் இந்தியா 2வது இடத்துக்கு சென்றது. அடுத்தப்போட்டியில் இந்தியா பஹ்ரைனை ஜனவரி 14ம் தேதி எதிர்கொள்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சாதனை நாயகன் சுனில் சேத்ரியின் மற்றொரு சாதனை!
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
சிரியா, கொரியா மற்றும் தஜிகிஸ்தான் கலந்து கொள்ளும் கால்பந்து தொடரை நடத்தும் இந்தியா
ஆர்சிபி பயிற்சியின் போது கோலியை சந்தித்த பிரபலம்!
ஆர்சிபி பயிற்சியின் போது கோலியை சந்தித்த பிரபலம்!
ஆசியக் கோப்பை 2019: முதல் சுற்றுடன் வெளியேறியது இந்தியா அணி!
ஆசியக் கோப்பை 2019: முதல் சுற்றுடன் வெளியேறியது இந்தியா அணி!
Advertisement