பெனால்டியை தடுத்த நாய்: இணையத்தில் வைரலாகும் கால்பந்து வீடியோ

Updated: 21 November 2018 12:32 IST

கோல் கம்பம் அருகே நின்று கொண்டிருந்த நாய் பெனால்டி ஷாட்டின் போது கோல் வளையத்துக்குள் நுழைய முயன்றது மட்டுமின்றி வீரர் அடித்த பந்து கோலாக மாறாமலும் தடுத்துள்ளது. 

A Dog
இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. © Screengrab/YouTube

விளையாட்டு போட்டிகளின் நடவே விலங்குகள் மற்றும் பறவைகளின் குறுக்கீடு இருப்பதை எப்போதும் அறிந்திருக்கிறோம். அதேபோல் ஒரு நிகழ்வு தற்போது கால்பந்து போட்டி ஒன்றி நிகழ்ந்துள்ளது. கோல் கம்பம் அருகே நின்று கொண்டிருந்த நாய் பெனால்டி ஷாட்டின் போது கோல் வளையத்துக்குள் நுழைய முயன்றது மட்டுமின்றி வீரர் அடித்த பந்து கோலாக மாறாமலும் தடுத்துள்ளது. 

இந்தப் போட்டி எங்கு நடந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கால்பந்தாட்டங்களில் நாய்கள் மற்றும் பூனைகளின் குறுக்கீடு அறிந்தது தான் என்றாலும் பெனால்டியை தடுப்பது என்பது அசாதாரணமான விஷயம் என்று சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பகிரப்படுகிறது.

இந்தப் போட்டியில் கோல் கீப்பர் வீரரை பார்த்த வண்ண‌மே இருக்கிறார். வீரர் பந்தை அடிக்கும் வரை பக்கத்தில் இருந்த நாய். திடீரென கோல் கம்பத்துக்குள் புகுந்து கோலை தடுத்தது. வீரர்கள் மற்றும் நடுவர் செய்வதறியாமல் திகைத்தனர். பார்வையாளர்களை இந்த நிகழ்வு ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

இது போன்ற இன்னொரு சம்பவமும் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்தின் உள்ளூர் அணிகளான ஹால்ஸ்வென் மற்றும் ஸ்கெமெர்ஸ்டேல் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கழுகு ஒன்று போட்டியில் குறுக்கீடு செய்தது. மேலும் அர்ஜெண்டினாவில் நடைபெற்ற போட்டி ஒன்று ஒரு நாய் ஆட்டத்தை 7 நிமிடம் தாமதமாக்கியது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"நான் விருது வாங்குவதை அவர் பார்த்ததில்லை" - தந்தை குறித்து ரொனால்டோ
"நான் விருது வாங்குவதை அவர் பார்த்ததில்லை" - தந்தை குறித்து ரொனால்டோ
சாடியோ மானேவுடன் பிரச்னை... வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த முகமது சலா
சாடியோ மானேவுடன் பிரச்னை... வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த முகமது சலா
"என் அணி, என் வீரர்கள்" - கத்தாருடனான ட்ரா குறித்து சுனில் சேத்ரி!
"என் அணி, என் வீரர்கள்" - கத்தாருடனான ட்ரா குறித்து சுனில் சேத்ரி!
பணம் பறிக்கும் நோக்கில் நெய்மர் மீது புகார் தந்த மாடல் மீது வழக்கு!
பணம் பறிக்கும் நோக்கில் நெய்மர் மீது புகார் தந்த மாடல் மீது வழக்கு!
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
Advertisement